நாம் ஏனையவர்களுக்கு அனுப்ப வேண்டிய ஒரு தகவலை இணையத்தை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.

பி.டி.எப் (PDF) இணையதளம்

ஆவணங்களை பகிர Docdroid இணையதளம் 

அந்தவகையில் நாம் கணினி மூலம் அல்லது ஸ்மார்ட் போன் மூலம் உருவாக்கக் கூடிய பி.டி.எப். (PDF) ஆவணங்கள், மைக்ரோசாப்ட் வேர்ட் (.Doc), பவர் பாயிண்ட் (PPT), மைக்ரோசாப்ட் எக்ஸெல் (.xls) போன்றவற்றை மிக இலகுவாக ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகிறது Docdroid எனும் இணையதளம்.


இந்த இணையதளத்துக்கு சென்று Select Files என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய ஆவணத்தை தெரிவு செய்து குறிப்பிட்ட தளத்துக்கு தரவேற்றலாம்.


பின்னர் பெறப்படும் இணைப்பை ஆவணத்தை அனுப்ப வேண்டிய நபருக்கு பேஸ்புக், வாட்ஸ்அப் அல்லது ஏனைய வழிகளில் அனுப்புவதன் மூலம் அவரால் அந்த ஆவணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Docdroid இணையதளத்தின் சிறப்பம்சங்கள்.  • ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்ற எளிமையான இடைமுகத்தை இது கொண்டுள்ளதுடன் மிக இலகுவாக ஆவணங்களை தரவேற்றிக்கொள்ள முடிகிறது.
  • எதுவித கணக்குகளையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது Docdroid தளத்தின் மூலம் திறக்கப்பட்ட PDF ஆவணம்.


  • தரவேற்றப்பட்ட ஆவணத்தை திறந்து பார்ப்பதற்கான வசதி குறிப்பிட்ட தளத்திலேயே தரப்பட்டுள்ளது.
தரவேற்றப்பட்ட பின் Edit என்பதை சுட்டுவதன் மூலம் அந்த ஆவணத்துக்கு 
கடவுச்சொற்களை இடலாம்.


  • நீங்கள் பகிரும் ஆவணங்களுக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு இந்த தளம் மூலம் கடவுச்சொல் இட்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தை பார்க்க இங்கே சுட்டுக. ( 1234 எனும் கடவுச்சொல்லை பயன்படுத்துக.)குறிப்பு:
இந்த தளம் மூலம் நீங்கள் பகிர்ந்த ஆவணங்கள் 60 நாட்கள் வரை பார்க்கப் படாவிட்டால் அது தானாகவே நீக்கப்பட்டுவிடும்.


தொடர்புடைய இடுகைகள்:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top