popSLATE 2 எனும் ஐபோன்களுக்கான கவரை (Cover) பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஐபோனில் மேலதிகமாக ஒரு திரையை பெறலாம்.

ஐபோன் இரண்டு திரை


இதன் மூலம் ஏராளமான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.


இது கடந்த வருடம் popSLATE 1 என அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள popSLATE 2 முன்னையதை விடவும் 40% குறைந்த தடிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



புதிய popSLATE 2 கவர் உங்கள் ஐபோனுக்கு வெறும் 0.16 அங்குல தடிப்பையே ஏற்படுத்தும்.

நாம் நேராத்தை பார்ப்பதற்காகவும் நோட்டிபிகேஷன் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும் popSLATE 2 கவரை பயன்படுத்த முடிவதுடன், மின் புத்தகளை வாசிப்பதற்கும் இது வழிவகுக்கிறது.

மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஐபோன் சாதனத்தின் பேட்டரி நீடித்திருக்கும் நேரத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும்  popSLATE 2 கவரில் தரப்பட்டிருக்கும் பேட்டரியையும் ஐபோன் பேட்டரியையும் ஒரே நேரத்தில் மின்னேற்றிக்கொள்ள முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை ஐபோன் 6, 6 எஸ், 6 ப்ளஸ், மற்றும் 6 எஸ் ப்ளஸ் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தலாம். இதன் 129 மற்றும் 149 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு கீழே இணைப்பில் உள்ள இணையதளத்தை பார்க்க:



தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top