பேஸ்புக் மெசெஞ்சரில் சதுரங்க விளையாட்டை நண்பர்களுடன் விளையாடுவதற்கான வசதியை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.


பேஸ்புக் மெசெஞ்சர் கூடைப்பந்து

பேஸ்புக் மெசெஞ்சரில் கூடைபந்தும் (Basketball) விளையாடலாம்

இதனை தொடர்ந்து பேஸ்புக் மெசெஞ்சரில் கூடைபந்து விளையாடுவதற்கான வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.


இதனை நீங்களும் விளையாட விரும்பினால் இமொஜி பகுதியில் இருக்கும் கூடைப்பந்துக்கான குறியீட்டை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும்.


பின் அந்த இமொஜியை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட விளையாட்டை விளையாடி மகிழலாம். நீங்கள் பெற்ற அதிகூடிய புள்ளிகளை உங்கள் நண்பரால் அறிந்துகொள்ளவும் முடியும்.
நீங்களும் விளையாடித்தான் பாருங்களேன்.

இமொஜியை எப்படி பெறுவது?

மேலே குறிப்பிட்ட இமொஜியை ஸ்மார்ட் போனில் உள்ள  கீபோர்ட் மூலம் பெற முடியும். அல்லது ஸ்மார்ட் போன்களுக்கான கூகுள் இண்டிக் கீபோர்ட் செயலியிலும் இந்த இமொஜி தரப்பட்டுள்ளது. இல்லையெனின் 🏀 இந்த குறியீட்டை Copy செய்து நண்பருக்கு பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் அனுப்புவதன் ஊடாகவும் இந்த விளையாட்டை விளையாடலாம்.

ஐபோன், ஆண்ட்ராய்டு ஆகிய இரு சாதனங்களிலும் இந்த வசதியை பெற முடியும். இதற்கு பேஸ்புக் மெசெஞ்சரை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்க 

Love to hear what you think!

1 comments:

 
Top