ஆரம்பத்தில் கணனியூடாக பயன்படுத்திய பேஸ்புக், ஜிமெயில் போன்ற ஏராளமான சேவைகளை நாம் இன்று ஸ்மார்ட் போன்களின் ஊடாக பயன்படுத்தி வருகிறோம்.

பேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர்


அவ்வாறன சேவைகளை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதற்கு செயலிகள் தரப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சேவைகளில் ஒரு கணக்கையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அண்மையில் பேஸ்புக் மெசேன்ஜர் சேவையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தாலும் பேஸ்புக் செயலியில் அந்த வசதி வழங்கப்படவில்லை.

அதேபோல் வாட்ஸ்அப் சேவையிலும் கூட ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியாது.

எனினும் ஒரு ஸ்மார்ட் போனில் இரண்டு கணக்குகளையும் பயன்படுத்தலாம் 


என்றாலும் Parallel Space எனும் செயலியை பயன்படுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் உட்பட எந்த ஒரு சேவையினதும் இருவேறு கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


வெறும் 2.2 MB அளவைவையே கொண்டுள்ள இதனை தரவிறக்குவதும் பயன்படுத்துவதும் மிக இலகு.

Parallel Space செயலியை பயன்படுத்துவது எப்படி? 

இந்த செயலியில் தரப்பட்டுள்ள "+" குறியீட்டை சுட்டுவதன் மூலம் நீங்கள் மற்றுமொரு கணக்கை பயன்படுத்த விரும்பும் செயலியை தெரிவு செய்ய வேண்டும்.பின்னர் நீங்கள் தெரிவு செய்த செயலி  Parallel Space எனும் செயலியின் பிரதான இடைமுகத்தில் இணைக்கப்படும்.

இனி அவ்வாறு இணைக்கப்பட்ட செயலியை சுட்டுவதன் மூலம் அதில் புதிய கணக்கை உள்ளிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வளவுதான்..!

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top