தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியால் வீட்டிலிருந்தே பெருட்களை கொள்வனவு செய்ய முடிந்தாலும் பல்வேறு சந்தர்பங்களில் அவைகள் கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தும் சந்தர்பங்களும் உண்டு.

இணைய கொடுக்கல் வாங்கல்


அந்தவகையில் இணையத்தின் ஊடாக பொருட்களை கொன்வனவு செய்ய உதவும் 11street எனும் இணையத்தின் மூலம் ஐபோன் 6 எஸ் கொள்வனவு செய்தவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.


மலேசியாவை சேர்ந்த Alans Ng என்பவர் குறிப்பிட்ட இணையதளத்தின் ஊடாக 736 அமெரிக்க டொலர்களுக்கு ஐபோன்  6 எஸ் கொள்வனவு செய்துள்ளார்.


சில நாட்களின் பின்னர் அது வீட்டுக்கு வரவே அதை திறந்து பார்த்ததும் அதில் இருந்தது ஐபோனுக்கு பதிலாக ஒரு பூட்டு. எனவே பேரதிர்ச்சி அடைந்த Alans Ng தனது சங்கடத்தை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐபோன் ஏமாற்று வேலை


இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தெரிய வரவே அவர் கொள்வனவு செய்த ஐபோன்  6 எஸ் ஸ்மார்ட் போனை மீள வழங்கியுள்ளது குறிப்பிட்ட நிறுவனம்.

11street என்பது ஒரு தனி நிறுவனமல்ல மூன்றாம் நபர் விற்பனையாளர்கள் மூலமே விற்பனை இடம்பெறுகிறது. எனவே வாடிக்கையாளர்களின் பூரண திருப்திக்கு பின்னரே விற்பனையாளர்களின் பணம் அவர்களை சென்றடைகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ இணையம் மூலமான கொடுக்கல் வாங்கல்களின் போது விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டதன் பின்னர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதே சிறந்தது.

இதன் வீடியோ இணைப்பை காண இங்கே சுட்டுக.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top