சிறந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் ஒப்போ நிறுவனம் ஒப்போ ஆர்9 மற்றும் ஒப்போ ஆர்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

 ஒப்போ ஆர் 9/ஆர் 9 ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள்


சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ள இந்த இரு ஸ்மார்ட் போன்களிலும் செல்பி புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஒப்போ ஆர்9 ஸ்மாட் போன் 


ஸ்மார்ட் போன்களில் முன்புறத்தில் இருக்கும் செல்பி கேமராவை விட அதில் இருக்கும் பிராதான கேமராவுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதுண்டு.

எனினும் ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஒப்போ ஆர்9 ஸ்மார்ட் போனில் அதன்  முன்புறத்தில் இருக்கும் செல்பி கேமராவுக்கே முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான கேமரா 13 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ள அதேவேளை இதில் வழங்கப்பட்டுள்ள செல்பி கேமரா 16 மெகாபிக்சல்  தெளிவுத்திறனை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் இதில் 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி உள்ளக நினைவகம் தரப்பட்டுள்ளது. இதன் நினைவகத்தை மேலும் அதிகரிக்க விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்ட் நினைவகத்தை பயன்படுத்தி 128 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

மேலும் 5.5 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒப்போ நிறுவனத்தின் கலர் ஓ.எஸ் எனும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.ஒப்போ ஆர் 9 ப்ளஸ் ஸ்மார்ட் போன்  

ஒப்போ ஆர் 9 ப்ளஸ் ஸ்மார்ட் போன் 6 அங்குல எச்.டி AMOLED திரையை கொண்டுள்ளது.

4K திறனில் வீடியோ கோப்புக்களை பதிவு செய்யக்கூடிய இதன் கேமரா 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ளது. மேலும் இதில் செல்பி புகைப்படங்களுக்காக 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்ட முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

4 ஜிபி RAM நினைவகத்தை கொண்டுள்ள இது 128 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய இருவேறு உள்ளக நினைவகத்தை கொண்டவைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நினைவகத்தை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.

இவ்விரு ஸ்மார்ட் போன்களும் 4ஜி வலையமைப்புகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்  ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது.

ஏப்ரல் 12 முதல் உலாகலாவிய ரீதியில் விற்பனைக்கு விடப்படவுள்ள இவற்றின் விலைகள் முறையே  கிட்டத்தட்ட  29,000 மற்றும் 34,000 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top