கூகுள் தனது தேடியந்திரத்தில் தொடர்ச்சியாக பல புதுப்புது மாற்றங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.அந்தவகையில் தற்பொழுது புதியதொரு வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

உங்கள் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தல் "லப் டப்" என்ற சப்தத்தை உணர முடிகிறதல்லவா?

இனி அந்த சப்தத்தை கூகுள் தேடியந்திரத்திலும் உணர முடியும்.


ஒரு ஆரோக்கியமயுள்ள நபரின் இதயம் நிமிடமொன்றுக்கு 60 தொடக்கம் 100 தடவைகள் வரை துடிக்கும்.எனினும் இது குறிப்பிட்ட நபரின் உடல் நலத்தை பொருத்தும், சந்தர்பங்களை பொருத்தும் கூடிக்குறையும் 

இவ்வாறு கூடிக்குறையும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் எவ்வாறான ஓசை எழுப்பப்படும் என்பதை இனி கூகுளின் முகப்புப்பக்கம் மூலமே அறிந்து கொள்ளலாம். இதில் ஆகக் குறைந்தது  40 தொடக்கம்  ஆகக்கூடியது 208 தடவைகள் வரை தரப்பட்டுள்ளது.


தொடர்புடைய இடுகை:


40 தொடக்கம் 208 வரையான ஒவ்வொரு சந்தர்பங்களிலும் எவ்வாறான ஓசை எழுப்பப்படும் என்பதை நீங்களும் கூகுள் மூலம் அறிய கூகுளில் metronome என தட்டச்சு செய்து தேடுக.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top