இன்று எமது புகைப்படங்களை ஸ்மார்ட் போன் மூலமாக வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்றிக்கொள்ள ஏராளமான செயலிகள் இருந்தாலும் எந்த ஒரு செயலியையும் பயன்படுத்தாமல் நேரடியாக இணையத்தின் ஊடாக புகைப்படங்களை மாற்றிக்கொள்ள உதவுகிறது photofunia எனும் இணையதளம்.

மொபைல் போட்டோ எடிட்டிங்


மொபைல் சாதனங்களுக்கு ஏற்றவாறான எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த தளத்தின் மூலம் உங்கள் புகைப்படங்களை 400 க்கும் மேற்பட்ட தோற்றங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.ஸ்மார்ட் போன், டேப்லெட், மற்றும் கணினி ஆகிய எந்த ஒரு இணையத்தை பயன்படுத்தக்கூடிய சாதனம் மூலமாகவும் இந்த தளத்துக்கு எமது புகைப்படங்களை தரவேற்றி குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள ஒரு விளைவுக்கு எமது புகைப்படங்களை மாற்றி அவற்றை தரவிறக்கிக் கொள்ள முடியும்.எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியுமான இந்த தளத்தின் மூலம் புகைப்படங்களை மாத்திரமல்லாது எழுத்துக்களையும் வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ள முடிகிறது.நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top