மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்மார்ட்போன்


5.5 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது.மேலும் 1GB RAM நினைவகத்தை கொண்டுள்ள இதில் 8GB உள்ளக நினைவகம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


இதன் கேமராவை பொறுத்தவரையில் செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்கு ஏற்றவகையில் 5 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய முன்பக்க கேமராவும் 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இவைகள் தவிர வை-பை, ப்ளூடூத், ஜி.பி.எஸ் போன்ற பொதுவான வசதிகளும் வழங்கப்பட்டுள்ள இதன் விலை 4,999 ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது. விற்பனை எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் ஸ்னேப்டீல் இணையதளத்தின் ஊடாக ஆரம்பமாகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top