மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்களால்  பயன்படுத்தப்பட்டு வரும் உலகின் மிகப்பெரியதொரு  சேவையான வாட்ஸ்அப் சேவையை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை  தொடர்ந்து வாட்ஸ்அப்  சேவையில்  புதிய பல மாற்றங்களை  தொடர்ச்சியாக  ஏற்படுத்தி  வருகின்றமை  நாம்  அறிந்த  விடயமாகும்.

வாட்ஸ் அப் வீடியோ கால்


அந்த வகையில் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்  விதத்தில் வாட்ஸ்அப்  சேவையை  முற்றிலும் இலவசமாக பயன்படுத்தும்  வசதி  அண்மையில்  ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன்  பலருக்கும்  பயனளிக்கும் வகையில் வாட்ஸ்அப் மூலம்  PDF ஆவணங்களை  பகிர்வதற்கான  வசதியும் ஏற்படுத்தப்பட்டது.


இவ்வாறான  வசதிகளுடன்  பலராலும்  எதிர்பார்க்கப்படுவது வட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதியாகும்.

வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் பயன்படுத்தும்  எமது உறவினர்கள்  நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை  மேற்கொள்ள உதவுகிறது Booyah எனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை  தரவிறக்கிக் கொள்ளலாம்.Booyah செயலியை பயன்படுத்துவது எப்படி?

  • இந்த செயலியை பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்தவித  கணக்குகளையும் ஆரம்பிக்க  வேண்டிய அவசியம் இல்லை.

  • இதனை நிறுவிய பின் Booyah செயலியை திறந்து  நேரடியாக  பயன்படுத்திக் கொள்ளலாம்.


1. இதனை திறந்த பின் Start Now என்பதை  சுட்ட வேண்டும்.
2. பின்னர்  பெறப்படும்  இடைமுகத்தின் மேற்பகுதியில் உள்ள பச்சை நிற பட்டனை சுட்டுவதன் மூலம் நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்ள விரும்பும் வாட்ஸ்அப் நண்பரை தெரிவு செய்யலாம்.

3. பின்னர் நீங்கள் தெரிவு செய்த நபருக்கு ஒரு இணைப்பு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

4. அவர் அதனை சுட்டும்போது உங்கள் இருவராலும் வீடியோ கால் பேச முடியும். (ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்)
குறிப்பு: 
  • இதற்கு அவரது ஸ்மார்ட் போனிலும் Booyah செயலி நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். நீங்கள் வீடியோ அழைப்பை மேற்கொள்வதற்காக அனுப்பும் இணைப்பு மூலமே அவரால் குறிப்பிட்ட செயலியை நிறுவிக் கொள்ளவும் முடியும்.
  • இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வசதியில்ல. வாட்ஸ்அப் நண்பர்களுடன் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் மூன்றாம் நபர் செயலி ஆகும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top