எமது குரலுக்கு ஏற்றவாறு கூகுள் நவ் செயலியை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பதை எமது முன்னைய பதிவின் மூலம் பார்த்திருந்தோம்.

குரல் மூலம் ஸ்மார்ட்போன் கட்டுப்படுத்த


இனி குரல் கட்டளைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.இணையத்தை தொடர்புபடுத்தியதன் பின்னர் OK Google என கூறினால் கூகுள் செயலி திறக்கும் பின்னர் பின்வரும் கட்டளைகளை பயன்படுத்தலாம்.

பொதுவான கூகுள் நவ் குரல் கட்டளைகள்


1. ஒரு மொழியை இன்னுமொரு மொழிக்கு மொழி மாற்றிக்கொள்வதற்கு குறிப்பிட்ட சொல்லுடன் in என்பதை சேர்த்து குறிப்பிட்ட மொழியை குறிப்பிட வேண்டும்.


  • உதாரணத்திற்கு How are you in Tamil என கூறலாம். இதன் போது How are you என்பது "எப்படி இருக்கிறீர்கள்" என தமிழ் மொழிக்கு மாற்றப்படும்.


இது போன்று கூகுள் தேடியந்திரத்தின் மூலம் துல்லியமான முடிவுகளை பெற்றுக்கொள்வதற்கு பயன்படும் எந்த ஒரு குறிச்சொல்லையும் இதில் பயன்படுத்தலாம்.

உதாரணத்திற்கு தற்போதைய நேரத்தை அறிய, காலநிலை தொடர்பான தகவல்களை அறிய, சூரிய உதயத்தை அறிய, பறவை மிருகங்களின் ஓசைகளை அறிய, நீர் மட்டம் அல்லது ரச மட்ட வசதியை கூகுளில் பெற  என்பது போன்ற அவற்றுக்கென பயன்படுத்தப்படும் பிரத்தியோகமான குறிச் சொல்களை கூற முடியும்.

இவ்வாறன குறிச்சொல்களின் முழுமையான பட்டியலை அறிய எமது பின்வரும் பதிவை பார்க்க:
குறிப்புகளும் ஞாபகப்படுத்தல்களும்

2. பிறகொரு சந்தர்பத்தில் செய்ய வேண்டிய ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துமாறு கட்டளையிட வேண்டுமா?

Remind me to என்பதுடன் ஞாபகப்படுத்த வேண்டிய விடயத்தையும் நேரத்தையும் குறிப்பிடலாம்.

உதாரணத்திற்கு இரவு 7:30 மணிக்கு டி20 கிரிக்கட் போட்டியை பார்க்க ஞாபகப்படுத்த வேண்டும் எனின் அதனை பின்வருமாறு கூறலாம்.

"Remind me to Watch t20 at 7:30 PM"


3. குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சென்றவுடன் ஏதாவது ஒரு விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்வதற்குஉதாரணத்திற்கு வேலைக்கு சென்றவுடன் ஒரு நபருக்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டும் எனின்Remind me next time i am at work to make a call to Mr.X அல்லது  Remind me when i get work to make a call to Mr.X என கூறலாம். இதன் போது நீங்கள் குறிப்பிடும் இடத்தை உள்ளிடுவதற்கான ஒரு சாளரம் தோன்றும். அதில் குறிப்பிட்ட இடத்தை உள்ளிடல் வேண்டும். அந்த இடத்திற்கு சென்றவுடன் குறிப்பிட்ட விடயம் தானாகவே கூகுள் நவ் மூலம் உங்களுக்கு ஞாபகப்படுத்தப்படும்.


4.  குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அலாரத்தை அமைத்துக் கொள்வதற்கு

  • உதாரணத்திற்கு இன்னும் எட்டு மணித்தியாலங்களில் அலாரம் ஒலிக்கும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனின் பின்வருமாறு கூறலாம்.Wake me up in 8 hours என குறிப்பிடலாம்.

  • அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அலாரம் ஒலிக்கும் வகையிலும் அமைத்துக்கொள்ள முடியும்.


உதாரணத்திற்கு அதிகாலை 5 மணிக்கு அலாரம் ஒழிக்க வேண்டும் எனின் Set Alarm for 5 AM என குறிப்பிடலாம்.

5. உடனுக்குடன் குறிப்புக்களை எடுக்க வேண்டும் எனின்.

Note to self என்பதுடன் உங்களுக்கு தேவையான குறிப்புகளை கூறலாம்.


நேரம் மற்றும் திகதி

6. தற்போதைய நேரத்தை அறிய வேண்டும் எனின் What is the time என குரல் கட்டளை இடலாம்.

7. ஒரு நாட்டின் நேரத்தை அறிய What is the time in என்பதுடன் குறிப்பிட்ட நாட்டை குறிப்பிடலாம்.

8. நாட்காட்டியில் ஒரு விடயத்தை குறித்துக்கொள்ள வேண்டும் எனின் Create a calendar event என்பதுடன் குறிப்பிட்ட விடயத்தையும் அது குறிக்கப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவற்றையும் கூற வேண்டும்.

உதாரணத்திற்கு ஞாயிறு இரவு 9 மணிக்கு சென்னையில் இரவு உணவு என்பதை குரல் கட்டளை மூலம் நாட்காட்டியில் குறித்துக்கொள்ள வேண்டும் எனின் Create a calendar event Chennai in dinner sunday 9 PM என குறிப்பிடலாம்.


தொடர்பாடல்கள்

9. குறிப்பிட்ட ஒரு நபருக்கு அழைப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் எனின்.

Call என்பதுடன் அழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரின் பெயரை குறிப்பிடலாம்.

10. குரல் கட்டளை மூலம் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் எனின்Send Email என்பதுடன் குறிப்பிட்ட நபரின் பெயரையும் Subject என்பதுடன் மின்னஞ்சலின் தலைப்பையும் Message என்பதுடன் மின்னஞ்சலில் அனுப்பப்பட வேண்டிய விடயத்தையும் குறிப்பிட முடியும்.

உதாரணத்திற்கு ரவி என்பவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சலை அனுப்ப பின்வருமாறு குரல் கட்டளை இடலாம்.

Send email to Ravi Subject Thank you Message thank you for your feedback என குறிப்பிடலாம்.

11. குரல் கட்டளை மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும் எனின்Send SMS என்பதுடன் குறிப்பிட்ட நபரின் பெயரையும் விடயத்தையும் குறிப்பிடலாம்.

காலநிலை.

12. நீங்கள் இருக்கும் இடத்தின் காலநிலை தகவல்களை அறிய Weather என குரல் கட்டளை இடலாம்.

13. ஏதாவது ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் காலநிலை தகவல்களை அறிய What is the weather in என்பதுடன் குறிப்பிட்ட இடத்தின் பெயரை குறிப்பிடலாம்.


கூகுள் நவ் மூலம் கணிப்பீடுகளை மேற்கொள்ள.

14. ஏதாவதொன்றை ஒரு அலகில் இருந்து இன்னுமொரு அலகுக்கு மாற்றிக்கொள்ள.உதாரணத்திற்கு 1 கிலோமீட்டரை மீட்டரில் பெற்றுக்கொள்ள Convert 1 kilometer to meter என குரல் கட்டளை இடலாம்.

நாணய மாற்று விகிதம் உட்பட எந்த ஒன்றையும் மேற்குறிப்பிட்ட முறையில் ஒரு அலகில் இருந்து இன்னுமொரு அலகுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

15. ஒரு இலக்கத்தை இன்னொரு இலக்கத்துடன் பெருக்குவதற்கு

உதாரணத்திற்கு இலக்கம் 5 ஐ 5 ஆல் பெருக்க வேண்டும் எனின் How much is 5 times 5 என குறிப்பிடலாம்.

16. ஒரு எண்ணின் சதவீதத்தை காண்பதற்கு.

உதாரணத்திற்கு 200 இன் 5 சதவீதம் என்ன என்பதை அறிந்துகொள்ள What is 5 percent of  200 என குரல் கட்டளை இடலாம்.

17. ஒரு எண்ணின் வர்க்கமூலத்தை காண்பதற்கு Square root of என்பதுடன் குறிப்பிட்ட இலக்கத்தை கூறலாம்.

உதாரணத்திற்கு 36 இன் வர்க்க மூலத்தை காண்பதற்கு Square root of 36 என குரல் கட்டளை இடலாம்.


ஸ்மார்ட் போனில் உள்ளை வசதிகளை செயற்படுத்த துண்டிக்க

18. Turn on மற்றும் Turn off ஆகிய குரல் கட்டளைகளை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள வை-பை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், மற்றும் ஃப்ளாஷ் லைட் போன்றவற்றை செயற்படுத்திக் கொள்ளவும், நிறுத்திக் கொள்ளவும் முடியும்.

உதாரணத்திற்கு ஃப்ளாஷ் லைட்டை இயக்க வேண்டும் எனின் Turn on Flashlight என குரல் கட்டளையிட வேண்டும்.

19. குரல் கட்டளை மூலம் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை திறந்துகொள்ளவும் முடியும் இதற்கு Open என்பதுடன் குறிப்பிட்ட செயலியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

உதாரணத்திற்கு Open WhatsApp என கூறினால் உடனடியாக வாட்சஸ்அப் செயலி திறப்பதை காணலாம்.

இணையம்

20. ஒரு இணையதளத்தை திறந்துகொள்ள

Go To என்பதுடன் குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரியை கூறலாம்.

உதாரணத்திற்கு Go to google.com அல்லது Go to tamilinfotech.com போன்று Go to என்பதுடன் இணைய முகவரிகளை குறிப்பிட வேண்டும்.

21. பாடல்களை கேட்க

Play Music என்பதுடன் குறிப்பிட்ட பாடலின் பெயரை குறிப்பிட வேண்டும்.உதாரணத்திற்கு Play Music என்பதுடன் Why this Kolaveri di என குறிப்பிட்டால் உடனுக்குடன் யூடியூப் தளம் மூலம் குறிப்பிட்ட பாடலை கேட்க முடியும்.

22. குறல் கட்டளை மூலம் நாணயம் ஒன்றை சுழற்றுவதற்கு 

Flip a coin என கூறலாம்.

23. இது தவிர பல சுவாரஷ்யமான முடிவுகளை பெறுவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு பின்வரும் குரல் கட்டளைகளை கூறிப்பாருங்கள்.

“Do a barrel roll”
“Make me a sandwich!”
“How much wood could a woodchuck chuck if a woodchuck could chuck wood.”
“Tilt” or “Askew”
“What is your favorite color?”
“What does the fox say?”

இது போன்ற மேலும் பல சுவாரஷ்யமான முடிவுகளை கூகுள் மூலம் பெறுவதற்கான குறிச்சொற்களின் பட்டியலை காண கீழுள்ள இணைப்பில் செல்க.இவைகள் அனைத்திற்கும் இணையம் செயற்படுத்தப்பட்டிருத்தல் அவசியம் எனினும் இணைய இணைப்பின்றி கூகுள் நவ் வசதியை பயன்படுத்துவதற்கான வசதி மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top