இன்றோ காலம் மாறிவிட்டது..!  அன்று நாம் சாத்தியமாகும் என நினைத்துக் கூட பார்க்காத பல விடயங்கள் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியால் இன்று சாத்தியமாகியுள்ளது.

தமிழ் எஸ்.எம்.எஸ்


அந்த வகையில் எமக்கு தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை கூட அழைப்பவர் யார் என அறிந்து கொள்வதற்கான வசதி இன்று உருவாகியுள்ளது.தொடர்புடைய இடுகை:

அதேபோன்று எமக்கு வரும் குறுஞ்செய்திகளை அனுப்பியவர் யார் என உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவுகிறது ட்ரூ மெசேன்ஜர் (Truemessenger) எனும் செயலி.


எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் எஸ்.எம்.எஸ் (SMS) வசதியை பயன்படுத்திக் கொள்வதற்கு தரப்பட்டுள்ள செயலிக்கு பதிலாக இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Truemessenger
ட்ரூ மெசேன்ஜர் செயலியால் இனங்காணப்பட்ட இலக்கங்கள் true என்ற சிறிய
குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். 


குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கென எமது ஸ்மார்ட் போனில் ஏற்கனவே தரப்பட்டுள்ள செயலியை விடவும் பல மடங்கு வசதிகளை தரும் இதன் மூலம் பின்வரும் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

  • இது எளிமையான இடைமுகத்தை இது கொண்டுள்ளது.
Truemessenger android

  • எரிதங்களாக (Spam) இனங்காணப்பட்டுள்ள இலக்கங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை வேறுபிரித்து அறிந்து கொள்வதற்கான வசதி இதில் தரப்பட்டுள்ளது.
  • திரையில் இருந்து வரும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி இரவு நேரங்களில் கண்களுக்கு பாதிப்பின்றி பயன்படுத்திக் கொள்வதற்காக இதன் தோற்றத்தை மாற்றுவதற்கான வசதி இதில் தரப்பட்டுள்ளது (Settings > Themes > Dark)

Truemessenger spam filter

  • தொந்தரவு தரக்கூடிய இலக்கங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை தடைசெய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
Truemessenger settings page tamil

  • பழைய குறுஞ்செய்திகளை தானாகவே நீக்கிக் கொள்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. 
  • அனைத்திற்கும் மேலாக எமது தாய் மொழியிலேயே இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top