உறவினர்கள் நண்பர்களிடம் இருந்தும் மற்றும் ஏனைய பல வழிகளிலும் எமது ஸ்மார்ட் போனுக்கு பல்வேறுபட்ட குறுஞ்செய்திகள் அன்றாடம் வருகின்றன.

Android SMS Backup செய்வது எப்படி


அவற்றுள் தேவையற்ற குறுஞ்செய்திகளை நாம் நீக்கினாலும் கூட எதிர்காலத்தில் நமக்கு தேவைப்படுமே என நாம் கருதும் குறுஞ்செய்திகளை நாம் நீக்குவதில்லை.


இருப்பினும் எமது ஸ்மார்ட் போன் நீரில் விழுந்தோ அல்லது வேறு காரணங்களாலோ திடீர் என்று செயலிழந்து விடும் சந்தர்பத்தில் அல்லது துரதிஷ்டவசமாக எமது ஸ்மார்ட் போன் தொலைந்து போகும் போது நாம் சேமித்து வைத்த குருஞ்செய்திகளையும் நாம் இழக்க நேரிடும்.

எனவே எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் குறுஞ்செய்திகளை பாதுகாப்பாக ஓரிடத்தில் சேமித்துக் கொள்ளவும் தேவைப்படும்போது அவற்றை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது SMS Backup & Restore எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி 


இதன் மூலம் குறுஞ்செய்திகளை மாத்திரமல்லாது உங்களுக்கு வந்துபோன அழைப்புக்கள் தொடர்பான விபரங்களையும் (Call Logs) பாதுகாப்பாக சேமித்து பிறகொரு சந்தர்பத்தில் அதனை பார்க்க முடியும்.

3 MB ஐ விட குறைவான அளவையே கொண்டுள்ள இதனை நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.


அத்துடன் சிக்கல்கள் அற்ற எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இதனை பயன்படுத்திக் கொள்வதும் மிக இலகு.




இதனை திறக்கும்போது பெறப்படும் பிரதான சாளரத்தில் உள்ள Backup என்பதை சுட்டுவதன் மூலம் (இல:01) SMS மற்றும் Call Logs போன்றவற்றை Backup செய்துகொள்வதற்கான சாளரம் தோன்றும்.

இனி அனைத்து குறுஞ்செய்திகளையும் Backup செய்துகொள்ள விரும்பினால் All Conversation என்பதை தெரிவு செய்ய வேண்டும். (இல: 02)




குறிப்பிட்ட ஒரு சில குறுஞ்செய்திகளை மாத்திரம் Backup செய்யவேண்டிய தேவை இருப்பின் Selected Conversation Only என்பதை சுட்டுவதன் மூலம் தேவையான குறுஞ்செய்திகளை மாத்திரம் Backup செய்துகொள்ள தெரிவு செய்யலாம். (இல: 03)

மேற்குறிப்பிட்டவற்றை தெரிவு செய்ததன் பின்னர் குறிப்பிட்ட சாளரத்தில் தோன்றும் OK என்பதை அழுத்த அனைத்து குருஞ்செய்திகளையும் Backup செய்துகொள்ள முடியும். (இல: 04)


தொடர்புடைய இடுகை: 


அதேபோல் நீங்கள் Backup செய்யக்கூடிய குறுஞ்செய்திகளை உங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்துக் கொள்ள முடியுமான அதேநேரம் கூகுள் டிரைவ், ட்ராப் பாக்ஸ் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்துக் கொள்ளவும் முடியும். (இல: 05)

உங்கள் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படும் Backup File ஐ Copy செய்து மைக்ரோ SD நினைவகத்திலோ அல்லது கணினியிலோ சேமிப்பதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போன் திருத்த முடியாதவகையில் பழுதடைந்தாலும் கூட குறுஞ்செய்திகளை பாதுகாப்பாக புதிய ஸ்மார்ட் போனுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

அத்துடன் நீங்கள் விரும்பும் நேரத்தில் குறுஞ்செய்திகளை தானாகவே Backup செய்துகொள்ளும் வகையிலும் இந்த செயலியை அமைத்துக் கொள்ளலாம்.

இதனை மேற்கொள்ள இந்த செயலியின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று கோடுகளை கொண்ட மெனு பட்டனை சுட்ட வேண்டும்.

பின்னர் Preferences > Scheduled Backups என்பதை சுட்டுவதன் மூலம் Backup செய்யப்படவேண்டிய நேரம், எவ்வளவு நேரத்துக்கு ஒரு தடவை அல்லது எவ்வளவு நாளுக்கு ஒரு தடவை Backup செய்யப்படல் வேண்டும் என்பது போன்ற தெரிவுகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு Backup செய்யப்பட குறுஞ்செய்திகளை பிறகொரு சந்தர்பத்தில் பயனடுத்திக்கொள்ள இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ள Restore என்பதை தெரிவுசெய்ய வேண்டும். (இல: 06)


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

 
Top