பேஸ்புக் தளத்தை பயன்படுத்தாவர்களே இல்லை எனும் அளவுக்கு இன்று பலராலும் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பேஸ்புக் மெசேஞ்சர் அழைப்புக்கள்


அந்தவகையில் பேஸ்புக் பயனர்கள் தமது எண்ணங்கள், கருத்துக்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கென பேஸ்புக் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.


ஸ்மார்ட் போன்களுக்கான பேஸ்புக் மெசேஞ்சரானது "மெசேஞ்சர்" எனும் சேவைக்கு ஒரு படி மேலாக விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் தன்னகமாக கொண்டுள்ளது.


தொடர்புடைய இடுகைகள்:

பேஸ்புக் மெசேஞ்சர் குரல்/வீடியோ அழைப்புக்கள் 

அது மாத்திரம் இன்றி பேஸ்புக் மெசேஞ்சரில் குரல்/வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதியும் உள்ளது.

இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட ஏராளமான பயனர்களால் பேஸ்புக் மெசேஞ்சர் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்து வந்தது.

எனினும் இதன் புதிய பதிப்பில் பேஸ்புக் நண்பர்களுக்கு மிக இலகுவாக குரல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெசேஞ்சர் செயலியின் மிக அண்மைய பதிப்பை கீழுள்ள இணைப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.

பின்னர் பேஸ்புக் மெசெஞ்சரில் அழைப்புக்களை மேற்கொள்வதற்கான புதியதொரு பகுதி தோன்றியிருப்பதை காணலாம்.
இனி நீங்கள் அழைப்பை ஏற்படுத்த வேண்டிய நண்பரை தெரிவு செய்து அழைப்புக்களை மேற்கொள்ளலாம். (உங்கள் நண்பரின் பேஸ்புக் மெசேஞ்சர் செயலி முன்னைய பதிப்பை கொண்டிருந்தாலும் அவருக்கும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி தானாகவே அமைக்கப்பட்டுவிடும்)நீங்கள் குரல் அழைப்புக்களை மேற்கொள்ளும் அதேநேரம் முகம் பார்த்து கதைக்க வேண்டும் எனின் அதன் வீடியோ குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் நண்பரின் முகம் பார்த்து கதைக்கவும் முடியும்.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top