வாட்ஸ்அப் சேவை முற்றிலும் இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து அதன் மாதாந்த பயனர்கள் 1 பில்லியன் வரை அதிகரித்துள்ளது.

வாட்ஸ்அப் தடித்த வளைந்த எழுத்துஅத்துடன் இந்த சேவையில் அடிக்கடி பல புதுப்புது மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.அந்தவகையில் வாட்ஸ்அப் மூலம் நாம் பகிரும் தகவல்களில் தடித்த, வளைந்த மற்றும் குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களை பகிர்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான இதன் புதிய பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் மேம்படுத்தப்படவில்லை எனினும் பின்வரும் இணைப்பு மூலம் அதன் APK கோப்பை தரவிறக்கி நிறுவுவதன் ஊடாக அதனை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.


இதன் புதிய பதிப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவியதன் பின்னர் பின்வரும் வழிமுறைகளில் தடித்த, வளைந்த மற்றும் குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களை பகிரலாம்.தொடர்புடைய இடுகை:

வாட்ஸ்அப் மூலம் தடித்த, வளைந்த குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களில் சொற்களை அமைப்பது எப்படி? 

  • தடித்த எழுத்துக்களை கொண்ட சொற்கள்:

தடித்த எழுத்துக்களில் சொற்களை அல்லது வசனங்களை எழுத வேண்டும் எனின் குறிப்பிட்ட சொல்லின் அல்லது வசனத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நட்சத்திர குறியீட்டை * சேர்க்க வேண்டும்.

உதாரணம்: இது *தடித்த சொற்களை* கொண்ட வசனம் ("இது தடித்த சொற்களை கொண்ட வசனம்" என மாற்றப்படும்)

  • வளைந்த எழுத்துக்களை கொண்ட சொற்கள்:

வளைந்த எழுத்துக்களில் சொற்களை அல்லது வசனங்களை அமைக்க வேண்டும் எனின் அதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் Low Line எனும் குறியீட்டை _ சேர்க்க வேண்டும்.

உதாரணம்: இது _வளைந்த சொற்களை_ கொண்ட வசனம் (இது வளைந்த சொற்களை கொண்ட வசனம் என மாற்றப்படும்)

  • குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களை கொண்ட சொற்கள்:


அதேபோல் குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களை எழுத அவற்றின் இறுதியிலும் ஆரம்பத்திலும் Tilde எனப்படும் அலைகுறியை சேர்க்க வேண்டும்.


வாட்ஸ்அப் Bold


உதாரணம்: இது ~குறுக்குக் கோடிட்ட~ சொற்களை கொண்ட வசனம் (இது குறுக்குக் கோடிட்ட சொற்களை கொண்ட வசனம் என மாற்றப்படும்)

குறிப்பு: இவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் எழுதலாம். உதாரணத்திற்கு  தடித்த  எழுத்துடன் வளைந்த எழுத்தையும்  எழுத வேண்டும் எனின் *_தடித்த வளைந்த_* என எழுதலாம்.

மேலும் இதன் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் டவுன்லோட்


வாட்ஸ்அப் செயலியில் தனித்த நிறங்களை கொண்ட பின்புலப் படங்களை இடுவதற்கான வசதி மற்றும் வாட்ஸ்அப் தகவல்களுக்கு உடனுக்குடன் மறுமொழி அளிப்பதற்கான வசதி போன்றவைகளும் இதன் புதிய பதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் தொடர்பான ஏனைய பயனுள்ள பதிவுகள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top