உலகில் இருக்கும் மிக வலிமையானதும் பாதுகாப்பானதுமான தகவல் மையங்களுள் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையமும் ஒன்றாகும்.இதுவரைக்கும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் 15 வரையான தகவல் நிலையங்களை கூகுள் நிறுவனம் அமைத்துள்ளது.

இவற்றுள் ஓரிகனில் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையமும் ஒன்றாகும். கூகுள் பயனர்களின் தரவுகளை சேமிப்பதற்கென இங்கு 75,000 மேற்பட்ட இயந்திரங்கள் செயற்படுவதுடன் செக்கனுக்கு 1 பெட்டாபைட் வேகத்தில் தரவுகளை பரிமாற்றக்கூடிய அகலப்பட்டையை இது கொண்டுள்ளது.

மேலும், பயனர்களின் தரவுகள் சேமிக்கப்பட்ட எஸ்.எஸ்.டி மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவைகள் செயலிழக்கும் பட்சத்தில் அவற்றில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக மற்றொன்றுக்கு மாற்றப்படுவதுடன் பழுதடைந்த எஸ்.எஸ்.டி மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் உள்ள தரவுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு அது அங்கேயே அழிக்கப்பட்டு விடுகிறது.


அவ்வாறான ஒரு தகவல் நிலையத்தை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

கணினி, ஸ்மார்ட்போன் ஆகிய எந்த ஒரு சாதனத்தின் ஊடாகவும் இதனை பார்க்கலாம்.

வீடியோ இயங்கும் போது அதனை சுட்டுவதன் மூலம் வெவ்வேறு கோணங்களுக்கு திருப்பவும் முடியும்.கூகுள் கார்ட்போட் மூலம் இதனை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top