ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு என கிட்டத்தட்ட 1.8 மில்லியன் வரையான செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு கூகுள் ப்ளே ஸ்டோர்


எனவே நாம் எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவற்றுக்கு பொருத்தமான செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி பயன்படுத்துவதுண்டு.


கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் செயலிகளை மிக இலகுவாக தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடிந்தாலும் கூட சில சந்தர்பங்களில் செயலிகளை தரவிறக்க முடியாதவாறு பல்வேறு பிழைச்செய்திகள் தோன்றுவதுண்டு.

இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவைகள் தொடர்பான விளக்கங்களை கீழே காணலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோர் பிரச்சினைகளும் தீர்வுகளும்  


பிழைச்செய்தி 1: Error Code 194
பிழைச்செய்தி 2: Error Code 492


தோன்றும் சந்தர்ப்பம்:
கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் செயலிகளை தரவிறக்க முற்படும்போது.

தீர்வு:
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே சர்விஸ் போன்றவற்றால் சேமிக்கப்பட்டிருக்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க வேண்டும்.இதனை மேற்கொள்ள: Settings > General > Application Manager என்பதை சுட்டுவதன் மூலம் பெறப்படும் இடைமுகத்தில் "கூகுள் ப்ளே ஸ்டோர்" மற்றும் "கூகுள் ப்ளே சர்விஸ்" (Google Play Store, Google Play Services) போன்றவற்றை சுட்ட வேண்டும் பின்னர் பெறப்படும் சாளரத்தில் Force Stop மற்றும் Clear Cache போன்றவற்றை சுட்டுவதன் மூலம் இவற்றால் சேமிக்கப்பட்டுள்ள தற்காலிக கோப்புக்களை நீக்கிக் கொள்ள முடியும்.
பிழைச்செய்தி 3: Error Code 495


தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது அல்லது அவற்றை மேம்படுத்தும் (Update) போது

தீர்வு:
இதன் போது "கூகுள் ப்ளே ஸ்டோர்" மற்றும் "Google Services Framework" போன்றவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் உங்கள் கூகுள் கணக்கு தொடர்பான தகவல்களை நீக்கிவிட்டு அதனை மீண்டும் உள்ளிட வேண்டும்.

இதனை மேற்கொள்ள:  1. Settings > General > Application Manager எனும் பகுதி மூலம்  கூகுள் ப்ளே ஸ்டோர்" மற்றும் "Google Services Framework" போன்ற செயலிகளை தேடிப்பெருக.
  2. இனி அவற்றை சுட்டும் போது பெறப்படும் இடைமுகத்தில் Clear Data என்பதை சுட்டுக.
  3. பின்னர் Settings > General > Accounts > எனும் பகுதியின் ஊடாக கூகுள் கணக்கை தெரிவு செய்து அதனை நீக்குக.
  4. இனி உங்கள் ஸ்மார்ட் போனை Restart செய்து Settings > General > Accounts > எனும் பகுதியின் ஊடாக கூகுள் கணக்கை மீண்டும் உள்ளிட்டுக் கொள்க.


பிழைச்செய்தி 4: Error Code 941

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை புதுப்பிக்கும் (Update) போது.

தீர்வு:
"கூகுள் ப்ளே ஸ்டோர்" மற்றும் "டவுன்லோட் மேனேஜர்" போன்றவற்றால் சேமிக்கப்பட்டுள்ள தற்காலிக கோப்புக்களை நீக்க நேக்க வேண்டும்

இதனை மேற்கொள்ள மேற்குறிப்பிட்ட வகையில் Settings > General > Application Manager எனும் பகுதியின் ஊடாக "கூகுள் ப்ளே ஸ்டோர்" மற்றும் "டவுன்லோட் மேனேஜர்" போன்றவற்றை தெரிவு செய்து Clear Data மற்றும் Clear Cache போன்றவற்றை சுட்டுக.பிழைச்செய்தி 5: Error Code RH01

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது. (Error retrieving information from server)

தீர்வு:
  1. மேற்குறிப்பிட்ட வகையில் Clear Data மற்றும் Clear Cache என்பதை சுட்டுவதன் மூலம் Google Play Store மற்றும் Google Services Framework போன்றவற்றின் தற்காலிக கோப்புக்களை நீக்க வேண்டும்.
  2. பின்னர் Settings > General > Accounts எனும் பகுதியில் உள்ள உங்கள் கூகுள் கணக்கை நீக்கிவிட்டு அதனை மீண்டும் உள்ளிடுக.

பிழைச்செய்தி 6: Error Code RPC:S-5:AEC-0

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது.

தீர்வு:
Settings > General > Application Manager பகுதியின் ஊடாக "கூகுள் ப்ளே ஸ்டோர்", "டவுன்லோட் மேனேஜர்" மற்றும் Google Services Framework போன்றவற்றை தெரிவு செய்து Clear data, Clear cache மற்றும் Uninstall Update என்பவற்றை சுட்ட வேண்டும்.


பிழைச்செய்தி 7: Error Code 504

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது: (App could not be downloaded due to an error)

தீர்வு:
இதற்கும் மேற்கூறிய முறையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் Google Services Framework  போன்றவற்றை தெரிவு செய்து Clear data, Clear Cache என்பதை சுட்ட வேண்டும்.


பிழைச்செய்தி 8: Error Code 491

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது

தீர்வு:
  1. Settings > General > Accounts > பகுதியின் ஊடாக கூகுள் கணக்கை நீக்கிய பின் உங்கள் ஸ்மார்ட் போனை மீள துவக்கிக் கொள்க. (Restart)
  2. பின்னர் Google Services Framework செயலியை தெரிவு செய்து Clear data, Clear Cache என்பதை சுட்டுக. இறுதியாக Force Stop என்பதை அலுத்துக.


பிழைச்செய்தி 9: Error Code 498
பிழைச்செய்தி 10: Error Code 923


தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது அல்லது அவைகள் நிறுவப்படும்போது.

தீர்வு:
உங்கள் ஸ்மார்ட் போனில் Cache நினைவகம் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் இவ்வாறான பிழைச்செய்திகள் தோன்றலாம்.

எனவே உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் தேவையற்ற செயலிகள் மற்றும் கோப்புக்களை நீக்குக. இனி உங்கள் ஸ்மார்ட் போனை Recovery mode எனும் நிலையில் துவக்க வேண்டும். இது சாதனத்துக்கு சாதனம் வேறுபடலாம். நீங்கள் சாம்சங் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் Home button, Volume down button மற்றும் Power Button போன்றவற்றை ஒரே நேரத்தில் அழுத்தி உங்கள் ஸ்மார்ட் போனை துவக்குவதன் மூலம் அதனை Recovery mode எனும் நிலையில் துவக்கலாம்.

பின்னர் Wipe cache partition என்பதை தெரிவு செய்து Cache நினைவகத்தை நீக்கிக் கொள்க. (Volume Button ஐ பயன்படுத்தி தெரிவுகளை மேலும், கீழும் நகர்த்தலாம் Power Button குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளலாம்)


பிழைச்செய்தி 11: Error Code 919

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கி நிறுவ முடியும் ஆனால் திறக்க முடியாது.

தீர்வு:
உங்கள் ஸ்மார்ட் போனின் நினைவகம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் நினைவகம் பற்றாக்குறையாக இருக்கலாம். எனவே அதிக இடத்தை பிடித்திருக்கும் வீடியோ கோப்புக்கள், பாடல்கள், மற்றும் தேவையற்ற ஏனைய கோப்புக்களை நீக்குவதன் மூலம் இதனை சரிசெய்யலாம்.

பிழைச்செய்தி 12: Error Code 921

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகளை தரவிறக்கும் போது 

தீர்வு:
Settings > General > Application Manager எனும் பகுதியின் ஊடாக கூகுள் ப்ளே ஸ்டோர் செயலியை தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக. 


பிழைச்செய்தி 13: Package File Invalid
பிழைச்செய்தி 14: Error Code 911

தோன்றும் சந்தர்ப்பம்: 
செயலி தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்போது 

தீர்வு 1: 
கூகுள் ப்ளே சர்விஸ், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் Google Services Framework போன்றவற்றை தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.


தீர்வு 2:
வை-பை இணைப்பை துண்டித்துவிட்டு மொபைல் டாட்டா வசதியை பயன்படுத்தி குறிப்பிட்ட செயலியை நிறுவுக.

தீர்வு 3:
கூகுள் கணக்கை நீக்கிவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனை மீள துவக்குக பின்னர் கூகுள் கணக்கை மீண்டும் உள்ளிட்டு குறிப்பிட்ட செயலியை தரவிறக்குக.


பிழைச்செய்தி 15: Error Code 101

தோன்றும் சந்தர்ப்பம்:
செயலிகள் நிறுவப்படும்போது.

தீர்வு:
அளவுக்கதிகமான செயலிகள் நிறுவப்பட்டிருந்தால் இது போன்ற பிழைச்செய்திகள் தோன்றுவதுண்டு எனவே தேவையற்ற செயலிகளை நீக்குவதன் மூலம் இந்த பிழையை சரி செய்யலாம்.


பிழைச்செய்தி 16: Error Code 481
பிழைச்செய்தி 17: Error Code RPC:S-3

இது உங்கள் கூகுள் கணக்குடன் தொடர்புடைய ஒரு பிரச்சினைகளாகும்.

தீர்வு:
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் கணக்கை நீக்கி விட்டு புதியதொரு கணக்கை உள்ளிடுக.


பிழைச்செய்தி 18: Error Code 920

தோன்றும் சந்தர்ப்பம்: 
செயலிகளை தரவிறக்கும் போது.

தீர்வு 1:
வை-பை இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் செயற்படுத்திய பின் முயற்சித்துப் பாருங்கள் 

தீர்வு 2: 
ஏற்கனவே இருக்கும் கூகுள் கணக்கை நீக்கிவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனை மீள துவக்குக. பின்னர் மீண்டும் கூகுள் கணக்கை உள்ளிட்டு முயற்சித்துப் பாருங்கள் தொடர்ச்சியாக பிழைச்செய்தி தோன்றினால் புதியதொரு கணக்கை பயன்படுத்தி செயலிகளை தரவிறக்குக.

தீர்வு 3: 
கூகுள் ப்ளே ஸ்டோர் செயலியை தெரிவு செய்து Clear Cache, Clear Data மற்றும் Uninstall Update போன்றவற்றை சுட்டுக. பின்னர் உங்கள் ஸ்மார்ட் போனை மீள துவக்கி (Restart) செயலிகளை தரவிறக்குக.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top