வருடாந்தம் உலக நாடுகளின் இணைய வேகத்தை கணிப்பிட்டு வெளியிடும் அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த வருடமும் இணைய வேகம் தொடர்பிலான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

இணைய வேகம்


2015 ஆம் ஆண்டு 4 ஆம் காலாண்டுக்கான புள்ளிவிபரங்களின் படி உலகின் சராசரி இணைய இணைப்பு வேகமானது 2014 இறுதிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதத்தால் அதிகரித்து செக்கனுக்கு 5.6 மெகாபிட்ஸ் எனும் வேகத்தை அடைந்துள்ளது.உலகின் அதிகூடிய சராசரி இணைய இணைப்பை கொண்ட முதல் நாடு தென் கொரியாவாகும். இங்கு சராசரி இணைய இணைப்பின் வேகம் செக்கனுக்கு 26.7 மெகாபிட்ஸ்களாக அமைத்துள்ளது.


இருப்பினும் ஆசிய நாடுகளின் அதி குறைந்த சராசரி இணைய இணைப்பு கொண்ட நாடாக இந்தியா அமைந்துள்ளது. அகமை டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கணிப்பின் படி இந்தியாவின் சராசரி இணைய இணைப்பு வேகம் செக்கனுக்கு 1.8 மெகாபிட்ஸ்கள் ஆகும்.

சராசரி இணைய இணைப்பு வேகம்
சராசரி இணைய இணைப்பு வேகத்தை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு 78 ஆவது இடம், இந்தியாவுக்கு 114 ஆவது இடம்  


அதேநேரம் இலங்கையின் சராசரி இணைய இணைப்பு வேகம் செக்கனுக்கு 4.8 மெகாபிட்ஸ்களாக அமைந்துள்ளது எனினும் இது 2014 உடன் ஒப்பிடுகையில் 12 சதவீத அதிகரிப்பை காட்டினாலும் முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீத குறைவை காட்டுகிறது.

அதிகூடிய சராசரி இணைய இணைப்பு வேகத்தை கொண்ட முதல் 10 நாடுகளின் விபரம் பின்வருமாறு 

அதிகூடிய சராசரி இணைய இணைப்பு வேகத்தை கொண்ட முதல் 10 நாடுகள் 2015
அதிகூடிய சராசரி இணைய இணைப்பு வேகத்தை கொண்ட முதல் 10 நாடுகள்

தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top