உலகின் எந்த ஒரு பகுதியையும் பார்ப்பதற்கு கூகுள் மேப்ஸ் உதவுகின்றது. என்றாலும் குறிப்பிட்ட இடத்தை மெய்நிகராக பார்ப்பதென்றால் கூகுளின் ஸ்ட்ரீட் வியூவ் வசதியையே பயன்படுத்த வேண்டும்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் மொபைல்


இதன் மூலம் உலகின் அனைத்து பாகங்களையும் பார்க்க முடியும் என்று கூறமுடியாது. மாறாக கூகுளால் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களை ஸ்ட்ரீட் வியூவ் மூலம் பார்க்க முடியும்.


அந்த வகையில் இந்தியாவின் தாஜ் மஹால் உட்பட இன்னும் பல பகுதிகளை  கூகுளின் ஸ்ட்ரீட் வியூவ் ஊடாக மெய்நிகராக பார்க்கும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் இலங்கை 

தற்பொழுது, இலங்கையின் முனைய பாராளுமன்ற வீதி, கொழும்பு-கண்டி வீதி, அறுகம்பே வீதி மற்றும் ருவன்வெலிசாய உட்பட இன்னும் பல பகுதிகளை கூகுளின் ஸ்ட்ரீட் வியூவ் மூலம் பார்ப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.நீங்கள் கணினி மூலம் இணையத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலம் கூகுளின் ஸ்ட்ரீட் வியூவ் மூலம் இலங்கையின் பல பகுதிகளை பார்க்கலாம்.
நீங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவர் எனின் அவற்றுக்கான செயலி மூலமும் கூகுள் ஸ்ட்ரீட் வியூவை பார்க்க முடியும்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் செயலியை தரவிறக்க தொடர்புடைய இடுகைகள்:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top