பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக பல பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் தகவல்


எனினும் நாம் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மூலம் அந்தந்த சேவைகளை பயன்படுத்தும்போது அவற்றில் பகிரப்படும் தகவல்களை நேரடியாக கொப்பி செய்வதற்கான வசதி அவற்றில் வழங்கப்படவில்லை.

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் தகவல்களை கொப்பி செய்ய உதவும் யுனிவர்சல் கொப்பி செயலி 


எனினும் "யுனிவர்சல் கொப்பி" எனும் செயலியை பயன்படுத்தி கொப்பி செய்ய முடியாத எந்த ஒரு தகவலையும் மிக இலகுவாக கொப்பி  செய்துகொள்ள முடியும்.

கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.


பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து Universal Copy என்பதை செயற்படுத்திக் கொள்ளுங்கள். இதனை செயற்படுத்தும்போது தோன்றும் சாளரத்தில் OPEN SETTINGS என்பதை சுட்டுவதன் மூலம் Settings > Accessibility > Service பகுதிக்கு செல்லலாம்.

இனி Service எனும் பகுதியில் இருக்கும் Universal Copy என்பதையும் செயற்படுத்திக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இனி Universal Copy என்பதை நோட்டிபிகேஷன் பேனலில் காணலாம்.

பின்னர் நீங்கள் பேஸ்புக் தகவலை கொப்பி செய்ய வேண்டும் எனின் அந்த எழுத்துக்களை தொடர்ச்சியாக சுட்டும்போது Copy text எனும் பட்டன் தோன்றும் இனி அதனை சுட்டுவதன் மூலம் அந்த தகவலை கொப்பி செய்துகொள்ள முடியும்.இன்ஸ்டாகிராமில் உள்ள தகவலை கொப்பி செய்வதற்கு நோட்டிபிகேஷன் பேனலில் உள்ள  Universal Copy என்பதை சுட்டிய பின் இன்ஸ்டாகிராமில் உள்ள தகவலை தொடர்ச்சியாக சுட்ட வேண்டும் இதன்போது அவற்றை கொப்பி செய்வதற்கான சாளரம் உங்களுக்கு தோன்றும்.பிறகென்ன அவற்றை கொப்பி செய்து வாட்ஸ்அப், கூகுள் ப்ளஸ் மற்றும் ஏனைய சேவைகள் ஊடாக பகிர்ந்து கொள்ளலாம்.


குறிப்பு: யுனிவர்சல் கொப்பி செயலி மூலம் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் தகவல்கள் மாத்திரம் இன்றி கொப்பி செய்ய முடியாதவாறு தகவல்கள் பகிரப்படும் எந்த ஒரு சேவையில் இருக்கும் தகவல்களையும் கொப்பி செய்துகொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top