கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புக்களுள் ஒன்றான கூகுள் குரோம் இணைய உலாவி ஸ்மார்ட் போன்களிலும் கணினிகளிலும் பரவலாக பயன்பட்த்தப்பட்டு வருகிறது.

கூகுள் குரோம் டெக்ஸ்ட் எடிட்டர்


இது இணையப் பக்கங்களை வேகமாக உலா வருவதற்கு உதவுவது மாத்திரமின்றி பல அருமையான வசதிகளையும் தரக்கூடியதாகும்.


அந்த வகையில் இணைய இணைப்பு இல்லாத போதும் கூட கூகுள் குரோம் மூலம் இணையப்பக்கங்களை பார்ப்பதற்கான வசதியை எவ்வாறு செயற்படுத்திக் கொள்ளலாம் என்பதை எமது முன்னைய பதிவுகளில் பார்த்திருந்தோம்.


அதேபோல் உங்கள் கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய கூகுள் குரோம் இணைய உலாவியை சிறியதொரு உபாயத்தை பயன்படுத்தி ஒரு டெக்ஸ்ட் எடிட்டராக மாற்றிக் கொள்ளவும் முடியும்.

இதற்கு data:text/html, <html contenteditable> எனும் நிரலை கூகுள் குரோம் இணைய உலாவியின் Address Bar பகுதியில் தட்டச்சு செய்து Enter அலுத்துக இனி கூகுள் குரோம் உலாவியில் எந்த ஒன்றையும் தட்டச்சு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அவ்வளவுதான்..!


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top