எமது ஸ்மார்ட் போன் மூலம் நாம் நிறைவேற்ற எதிர்பார்க்கும் ஒரு செயற்பாட்டை எமது குரல் கட்டளைகள் மூலமும் மேற்கொள்வதற்கு இன்றைய ஸ்மார்ட் போன்கள் வசதிகளை தருகின்றன.

கூகுள் நவ் பயன்படுத்துவது எப்படி?


இந்த வசதி ஐபோன் சாதனங்களில் "சிறி" என்று அழைக்கப்படும் அதேவேளை இதற்கென கூகுள் வழங்கும் சேவை "கூகுள் நவ்" எனவும் மைக்ரோசாப்ட் வழங்கும் சேவை "கோர்டனா" என்றும் அழைக்கப்படுகிறது. (இவைகள் தவிர சாம்சங் ஸ்மார்ட் போன்களில் எஸ்.வாய்ஸ் எனவும் இது போன்றும் மேலும் பல சேவைகளும் உள்ளன.)


"கூகுள் நவ்" மற்றும் "கோர்டனா" போன்றவற்றை ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய மூன்று சாதனங்களிலும் பயன்படுத்தலாம். எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் "சிறி" வசதியை ஐபோன் சாதனங்களில் மாத்திரமே பெற முடியும்.

எது எப்படியோ கூகுள் ஒரு சேவையை வழங்குகிறதென்றால் அதில் தனித்துவமான பல விடயங்கள் இருக்கத்தானே செய்யும்.


குரல் கட்டளைகளை நிறைவேற்றும் கூகுள் நவ்

எனவே பலராலும் பயன்படுத்தி வரப்படும் "கூகுள் நவ்" பற்றி சற்று நோக்குவோம்.

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் "கூகுள் நவ்" செயலி அதில் இயல்பாகவே நிறுவப்பட்டிருக்கும். எனினும் அதை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்வதன் மூலம் சிறந்த அனுபவத்தை பெற முடியும்.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள செயலியை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.


இனி உங்கள் குரலுக்கு ஏற்ற வகையில் "OK Google"  என்பதை அமைத்துக்கொள்ள வேண்டும்.

எமது குரலுக்கு ஏற்றவாறு "OK Google" என்பதை அமைப்பது எப்படி?


இதற்கு இணையத்தை தொடர்புபடுத்தியதன் பின்னர் கூகுள்  செயலியை திறந்து Settings > Voice > "Ok Google" detection என்பதை சுட்டுக.இனி பெறப்படும் சாளரத்தில் From any screen எனும் வசதியை செயற்படுத்துக. பின் "Ok Google" என்பதை உங்கள் குரலுக்கு ஏற்றவகையில்  அமைத்துக் கொள்வதற்கான வசதி கிடைக்கும்.அதில் OK Google என நீங்கள்  மூன்று முறை கூறிய பின் அது உங்கள் குரலுக்கு ஏற்றவகையில் அமைந்துவிடும்.
இனி OK Google என்ற உங்கள் குரல் கேட்டாலே போதும் குரல் கேட்டு வீட்டில் உள்ள செல்லப் பிராணி ஓடி வருவது போல் உங்கள் குரல் கேட்டு கூகுள் செயலி தானாகவே Google செயலி திறக்கப்படும்.

பிறகென்ன உங்களுக்குத் தேவையான குரல் கட்டளைகளை இட வேண்டியதுதான்.

இதில் நாம் குரல் கட்டளைகளை இடும் போது ஆங்கிலம் அல்லது தெரிவு செய்யப்பட்ட சில மொழிகளையே பயன்படுத்த வேண்டும். (இவ்வாறான வசதிகள் எதிர்காலத்தில் தமிழ் மொழியிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது) எது எப்படியோ தற்போதைய நிலையில் பொதுவாக அனைவராலும் ஆங்கில மொழியில் இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

நாட்டுக்கு நாடு உச்சரிப்பு முறை வேறுபடுகிறதே? என்ன செய்யலாம்?

ஆங்கிலம் பரவலாக அனைத்து நாடுகளிலும் பேசப்பட்டாலும் கூட அதன் உச்சரிப்பு முறையில் ஏராளமான பாகுபாடுகள் உண்டு.

எனவே உச்சரிப்பு முறைக்கு ஏற்றவாறான ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான வசதி கூகுள் நவ் செயலியில் தரப்பட்டுள்ளது.

உச்சரிப்பு முறைக்கு ஏற்றவாறு கூகுள் நவ் செயலியை அமைத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.கூகுள் செயலியை திறந்து Settings > Voice > Languages > எனும் பகுதி மூலம் உங்கள் நாட்டிற்கு பொருத்தமான ஆங்கில உச்சரிப்பு முறையில் Tick செய்து கொள்க. நீங்கள் இந்தியா அல்லது இலங்கை எனின் English (US) என்பதுடன் English (India) என்பதையும் தெரிவு செய்வது உங்களுக்கு பொருத்தமானதாக அமையலாம்.

குரல் கட்டளைகள் தொடர்பான இதன் அடுத்த பதிவை பார்க்க கீழுள்ள இணைப்பில் செல்க

கூகுள் நவ் குரல் கட்டளைகளின் முழுமையான பட்டியல் (பகுதி 2)

கூகுள் நவ் செயலியை புதுப்பிக்க அல்லது தரவிறக்க கீழுள்ள இணைப்புகளில் செல்க

ஆண்ட்ராய்டு 

ஐபோன் 

விண்டோஸ் போன் 

Love to hear what you think!

1 comments:

 
Top