கிட்டத்தட்ட கணினிக்கு நிகரான வசதிகளை பெற்றுக்கொள்ள உதவும் இன்றைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கணினி மூலம் மேற்கொள்ள  முடியாத மேலும் பல வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

நிறம் ஆண்ட்ராய்டு செயலி


அந்தவகையில் சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் பொருளொன்றின் நிறம் உங்களை அதிகம் கவர்ந்துள்ளதா? அந்த நிறத்தை உங்களின் ஏதாவதொரு செயற்பாட்டில் பயன்படுத்த விரும்புகிறீர்களா?


அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Picklor ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.

உங்கள் கண்களுக்கு அகப்படும் அழகிய நிறங்களை அப்படியே ஸ்மார்ட் போன்களுக்குள் பிரதி செய்துகொள்ள வழிவகுக்கும் இந்த செயலியை நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக் கொள்ளலாம்.


இந்த செயலியை பயன்படுத்தி நிறங்களை பிடிப்பது எப்படி?

இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் இலகு.


1. Picklor செயலியை திறந்தவுடன் நேரடியாக கேமரா திறக்கப்படும்.

2. பின்னர் அதன் கேமராவில் தோன்றும் சிறிய வட்ட அடையாளத்தை நீங்கள் பிரதி செய்ய வேண்டிய நிறத்தின்  அருகே கொண்டு செல்ல வேண்டும்.

3. குறிப்பிட்ட நிறம் சரியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அதன் கீழ் மத்திய பகுதியில் இருக்கும் கேமரா பட்டனை அலுத்துக.


Picklor : Camera Color Picker app


4. இனி நீங்கள் தெரிவு செய்த நிறம் குறிப்பிட்ட செயலியின் வலது பகுதியில் தோன்றும்.

Picklor Camera


5. பிறகென்ன அந்த நிறத்தை சுட்டுவதன் மூலம் அதற்கு பெயர் ஒன்றை வழங்கி அதனை உங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்துக்கொள்ள முடியும்.


Picklor android app


குறிப்பிட்ட நிறத்தை கணினிகளில் துல்லியமாக பயன்படுத்திக் கொள்வதற்கான Hex மற்றும் RGB போன்ற Code களையும் பெற்றுக்கொள்ள முடிகின்றமை இதன் விஷேட அம்சமாகும்.


இந்த செயலியின் மேலதிக வசதிகள்

  • ஏற்கனவே உங்கள் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ள நிறங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


  • நிறங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் ஏனைய எந்த ஒரு சேவையின் ஊடாகவும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.


நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top