நாம் ஆரம்பத்தில் பௌதீக வடிவில் அமைந்த ஆவணங்களை இன்னுமொருவருக்கு இணையத்தின் ஊடாக அனுப்ப வேண்டிய தேவையிருப்பின் அதனை நாம் கணினியில் உள்ள ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தே அதனை மின்னஞ்சல் செய்வோம்.

ஸ்மார்ட் போன் டிஜிட்டல் ஸ்கேனர்


என்றாலும் இன்றைய ஸ்மார்ட் போன்கள் அந்த சிரமத்தை நிவர்த்தி செய்துள்ளது என்றே கூற வேண்டும்.


வணிக அட்டைகள், கட்டணப் பட்டியல்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற எந்த ஒன்றையும் நாம் நினைத்த மாத்திரத்தில் எமது ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து அவற்றை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற எந்த ஒன்றின் மூலமும் மிக விரைவாக பகிர்ந்து கொள்வதற்கென எமக்கு பல செயலிகள் துணை புரிகின்றன.

அந்தவகையில் பௌதீக வடிவில் அமைந்த எந்த ஒரு ஆவணத்தையும் மிக இலகுவாகவும் தெளிவாகவும் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றிக்கொள்ள உதவுகிறது CamScanner எனும் ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.


இந்த செயலியை திறக்கும் போது பெறப்படும் பிரதான இடைமுகத்தின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள கேமரா குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்களுக்கு தேவையான ஆவணங்களை கேமரா மூலம் ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் ஆவணமாக மாற்றிக்கொள்ள முடியும்.

 CamScanner smart phone


இந்த செயலியில் நீங்கள் விரும்பினால் மின்னஞ்சல் முகவரியை அல்லது தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு உங்களுக்கென்ற கணக்கொன்றை உருவாக்கி பயன்படுத்தலாம், எனினும் கணக்குகளை உருவாக்காமல் பயன்படுத்தவும் முடியும்.

 CamScanner ios


கணக்கொன்றை உருவாக்கி பயன்படுத்தும் போது CamScanner இணைய சேமிப்பகத்தில் உங்கள் ஆவணங்களை சேமித்துக் கொள்வதற்கு 200 MB இலவச இடம் தரப்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்பட்ட ஆவணங்களை ஏனையவர்களுக்கு பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கவும் அதற்கு அவர்களால் கருத்து தெரிவுக்கவும் முடியும்.

 CamScanner phone


மேலும் நீங்கள் பிடிக்கும் ஆவணங்களில் உள்ள ஆங்கிலம் உட்பட குறிப்பிட்ட சில மொழிகளில் அமைந்த எழுத்துக்களை Copy, Past செய்யக்கூடிய எழுத்துக்களாக மாற்றியும் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய இடுகை:


இறுதியாக நீங்கள் பிடித்த ஆவணங்களை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ஏனைய சேவைகள் மூலம் தேவையான நபர்களுடன் பகிரவோ அல்லது அவற்றை கூகுல் டிரைவ், டிராப் பாக்ஸ், ஒன் டிரைவ் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்துக் கொள்ளவும் முடியும்.

Mobile Doc Scanner


இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் போன் ஆகிய சாதனங்களில் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top