ஒரு பாடலில் உள்ள உங்களுக்குப் பிடித்த வரிகளை அல்லது இசையை மாத்திரம் பிரித்தெடுக்க விரும்புகிறீர்களா?

ஆண்ட்ராய்டு ஆடியோ, வீடியோ


திரைப்படத்தில் உள்ள நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு காட்சியை மாத்திரம் பிரித்தெடுக்க விரும்புகிறீர்களா?

அல்லது ஒரு வீடியோ கோப்பில் இருக்கும் இசையை அல்லது பாடலை மாத்திரம் வேறு பிரித்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Video to MP3 Converter எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.

எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இதன் மூலம் மேற்கூறிய எந்த ஒரு செயற்பாட்டையும் மிகவிரைவாக மேற்கொள்ள முடியும்.

கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.


ஒவ்வொரு  செயற்பாடுகளுக்கும் என தனித்தனியான பிரிவுகள் இதில் தரப்பட்டுள்ளன.

தொடர்புடைய இடுகை:


நீங்கள் வீடியோ கோப்புக்களின் ஒரு பகுதியை மாத்திரம் வேறு பிரித்துக்கொள்ள விரும்பினால் இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள Video Cutter என்பதை சுட்ட வேண்டும்.


பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து வீடியோ கோப்புக்களும் பட்டியல்படுத்தப்படும் அவற்றுள் உங்களுக்குத் தேவையானதை தெரிவு செய்ய வேண்டும்.இனி குறிப்பிட்ட வீடியோ கோப்பு இயங்கும். பின்னர் அந்த வீடியோ கோப்பில் இருந்து வேறுபிரிக்க வேண்டிய காட்சியின் ஆரம்பப் பகுதியையும் இறுதிப் பகுதியையும் குறிப்பிட்ட செயலியின் இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள இரு அம்புக்குறிகள் மூலம் தெரிவு செய்து Video Cutter குறியீட்டை சுட்ட வேண்டும்.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் தெரிவு செய்த பகுதி மாத்திரம் வேறு பிரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு வேறுபிரிக்கப்பட்ட பகுதியை OUTPUT எனும் பகுதியின் ஊடாக பார்க்க முடியும்.இதே போன்று MP3 பாடல்களை இசைகள் போன்றவற்றையும் இதன் மூலம் வேறுபிரித்துக் கொள்ள முடிவதுடன் வீடியோ கோப்புக்களில் உள்ள இசைகள் பாடல்களையும் தனியாக வேறுபிரிக்க முடியும்.

அவ்வாறு நீங்கள் உருவாக்கிய அனைத்து கோப்புக்களையும் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள OUTPUT எனும் பகுதியின் ஊடாக வெவ்வேறாக பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top