ஒரு தேடியந்திரமாக உலகுக்கு அறிமுகமான கூகுள் இன்று எத்தனையோ பல வசதிகளை இணையத்தின் ஊடாக இணையப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

கூகுள் புதிய வசதி


கூகுளால் எத்தனை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது இன்று வரை அதன் தேடியந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.கூகுள் தேடியந்திரத்தில் அண்மையிலும் கூட ஏராளமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. 

இவற்றுடன் பறவை, மிருகங்களின் சப்தத்தை கேட்பதற்கான வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த வசதி மூலம் ஆந்தை, கோழி, யானை, பூனை, குதிரை போன்றவைகள் உட்பட 15 க்கும் மேற்பட்ட விலங்குகளின் சப்தத்தை கூகுளின் முகப்புப்பக்கம் மூலமே கேட்க முடியும்.

நீங்களும் இந்த வசதியை பெறுவதற்கு கூகுளில் குறிப்பிட்ட விலங்கின் பெயருடன் Sound என்பதை தட்டச்சு செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம்.உதாரணத்திற்கு யானையின் சப்தத்தை அறிய Elephant Sounds என தட்டச்சு செய்தால் அதன் உருவப்படத்துடன் அதன் சப்தத்தை கேட்பதற்கான வசதி உங்களுக்கு தோன்றும். அதேநேரம் ஏனைய மிருகங்களின் சப்தங்களும் கீழே பட்டியல்படுத்தி தரப்பட்டுள்ளதை உங்களால் அவதானிக்கலாம்.

தற்பொழுது குறிப்பிட்ட சில விலங்குகளின் ஓசைகளே பட்டியல் படுதப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் பல நூற்றுக்கணக்கான மிருகங்களின் ஓசைகளை கூகுளின் மூலம் அறிந்து கொள்வதற்கான வசதி தரப்படலாம்.

எனவே இந்த வசதி ஆசிரியர் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதனை கணினி, ஸ்மார்ட் போன் ஆகிய இரு சாதனங்கள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மேலும் இனிப்பான விடயம் தானே..!


தொடர்புடைய இடுகை:[

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top