எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கு தேவையான எந்த ஒரு செயலியையும் மிக இலகுவாக கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தரவிறக்கிக் கொள்ள முடிந்தாலும் கூட சில சந்தர்பங்களில் அவற்றை தரவிறக்க முடியாதவாறு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல்வேறு பிழைச்செய்திகளும் தோன்றுவதுண்டு.

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்


இது போன்ற சந்தர்பங்களில் எமக்கு உதவுகிறது  APK PURE எனும் செயலி.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.


APK PURE செயலியை பயன்படுத்தி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்த ஒரு செயலியையும் மிக இலகுவாக தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடிவதுடன் மேலும் பல வசதிகளையும் பெற முடியும்.

APK PURE ஆண்ட்ராய்டு செயலியின் சிறப்பம்சங்கள் 

  • சில சந்தர்பங்களில்  கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்கும் போது பல்வேறு காரணங்களால் செயலிகளை  தரவிறக்க முடியாதவாறு பிழைச்செய்திகள் தோன்றுவதுண்டு. இது போன்ற சந்தர்பங்களில் APK PURE செயலியை பயன்படுத்தி எவ்வித தடையும் இன்றி செயலிகளை தரவிறக்கிக் கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:
  • சில செயலிகளை குறிப்பிட்ட ஒரு சில நாட்டவர்களால் மாத்திரமே தரவிறக்கி பயன்படுத்த முடியும். எனினும் APK PURE செயலியை பயன்படுத்தி எந்த ஒரு நாட்டில் இருப்பவராலும் எந்த ஒரு செயலியையும் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  • நீங்கள் ஏற்கனவே நிறுவியிருக்கும் செயலிகளுக்கு புதிய பதிப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை சோதித்து அவற்றை புதிய பதிப்புக்கு மிக இலகுவாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.  • நீங்கள் நிறுவும் செயலிகளை நீக்கிக் கொள்வதற்கான வசதியும் இந்த செயலியிலேயே தரப்பட்டுள்ளது.


  • நிறுவிய செயலிகளை நீங்கள் தவறுதலாக நீக்கினாலும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் APK PURE செயலியை பயன்படுத்தி செயலிகளை தரவிறக்கியிருந்தால் அவற்றை APK PURE செயலியின் Download Management எனும் பகுதியின் ஊடாக மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும்.


  • கூகுள் ப்ளே ஸ்டோரின் தோற்றத்தை போன்ற எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இதில் செயலிகள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டும் தரப்பட்டுள்ளது.

நீங்களும் பயன்படுத்தித் தான் பாருங்களேன்..!


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top