இணையத்தில் அடிக்கடி பேசப்பட்டு வந்த Vivo XPlay 5 எனும் ஸ்மார்ட் போன் உத்தியோகபூர்வமாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

6 GB மொபைல்


இது 6GB RAM நினைவகத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 6GB RAM நினைவகத்துடன் அறிமுகமாகும் உலகின் முதல் ஸ்மார்ட் போனும் இதுவாகும்.


இதில் அல்டிமேட்  பதிப்பு மற்றும் சாதாரண பதிப்பு என இருவேறு பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அல்டிமேட்  பதிப்பு 6GB RAM நினைவகம் மற்றும் சாதாரண பதிப்பு 4GB RAM நினைவகம் போன்றவற்றை கொண்டுள்ளது.

2560 x 1440 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட 5.43 அங்குல திரையுடன் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.

குவால்காம் ஸ்னேப்டிராகன்  820 பிராசசர், 128 ஜிபி உள்ளக நினைவகம் போன்றவற்றை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

மேலும் இதில் 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய முன்பக்க கேமரா போன்றவைகள் தரப்பட்டுள்ளன.

அத்துடன் இது 4G பிளஸ் வலயமைப்புகளுக்கான ஆதரவை கொண்டுள்ளது. இதன் மூலம் தரவுகளை செக்கனுக்கு 300 MB வரையான வேகத்தில் தரவிறக்க முடியும்.


இவைகள் தவிர ஃபிங்கர் பிரிண்ட் வசதி, பை-பை, ப்ளூடூத் போன்றவற்றுக்கான ஆதரவையும் இது கொண்டுள்ளது.


இதன்  அல்டிமேட்  பதிப்பு 654 அமெரிக்க டொலர்களாகவும் சாதாரண பதிப்பு 564 அமெரிக்க டொலர்களாகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை எதிர்வரும் 8 திகதி முதல் ஆரம்பமாகும். 


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top