2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் சேவையானது தற்பொழுது 7 ஆவது வருடத்தில்  பயணம் செய்கிறது.

வாட்ஸ்அப் பிரச்சினை


வாட்ஸ்அப்  பயன்படுத்தாதவர்களே  இல்லை எனும் அளவுக்கு பிரபலமாகியுள்ள இது  மாதாந்தம்  ஒரு  பில்லயன் பயனர்களை  கொண்டுள்ளது. 

ஆரம்பத்தில் இந்த சேவையை வருடாந்த சாந்த செலுத்தியே பயன்படுத்த வேண்டியிருந்தாலும் அண்மையில் வாட்ஸ்அப் சேவையை முற்றிலும் இலவசமாக பயன்படுத்துவதற்கான  வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.ஆரம்பத்தில் வெளிவந்த நோக்கியா நிறுவனத்தின் சிம்பியன் இயங்குதளங்களை கொண்ட மொபைல் சாதனங்களிலும்  இதனை  பயன்படுத்த முடிந்தது.

வாட்ஸ்அப்  நிறுவனத்தின்  இணையதளத்தில் அண்மையில் இடப்பட்டிருந்த பதிவின்படி  "ஆரம்பத்தில் வெளிவந்த நோக்கியா, பிளாக்பெர்ரி உட்பட  ஆண்ட்ராய்டு விண்டோஸ் இயங்குதளங்களின்  முன்னைய பதிப்புக்களை  கொண்டு இயங்கும் ஸ்மார்ட் போன்களுக்கான  ஆதரவை 2016 இன் இறுதியில் நிறுத்தவுள்ளதாக"  அந்த பதிவில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆண்ட்ராய்டு  2.1, ஆண்ட்ராய்டு 2.2 மற்றும் விண்டோஸ் போன் 7.1 போன்ற பதிப்புக்களை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான  ஆதரவையும் வாட்ஸ்அப்  நிறுவனம் நிறுத்தவுள்ளது.

எனவே நீங்கள் மேற்குறிப்பிட்ட  மொபைல் சாதனங்களை பயன்படுத்தும் அதேவேளை வாட்ஸ்அப் சேவையையும் தொடர்ச்சியாக பயன்படுத்த விரும்பினால் புதிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தத் துவங்குவதே சிறந்தது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top