இன்று உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களை பிரதான இரு பிரிவுகளுக்குள் உள்ளடக்கலாம்.

 ஐபோன் Error 53 பிழைச் செய்தி


ஒன்று ஐபோன் விரும்பிகள் மற்றையது ஆண்ட்ராய்டு விரும்பிகள்.


இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளங்களும் பயனர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இவற்றில் அடிக்கடி பல குறிப்பிடத்தக்க குறைபாடுகள் எழுவது தவிர்க்க முடியாத ஒரு விடயம் ஆகும்.

ஐபோனில் ஏற்படும் Error 53 எனும் பிழைச் செய்தி

அந்தவகையில் ஐபோனின் அண்மைய பதிப்புக்கலான ஐபோன் 6, 6 ப்ளஸ், 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு புதியதொரு பிரச்சினையும் எழத் துவங்கியுள்ளது.

அதாவது Error 53 எனும் பிழைச் செய்தியே அதுவாகும். இந்த பிரச்சினையால் ஆயிரக்கணக்கான ஐபோன் சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐபோன் சாதனங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை நீங்கள் அப்பிள் நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட நிறுவனங்களில் கொடுத்து அதனை திருத்தியிருந்தால் உங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் அப்பிள் நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்படாத மூன்றாம் நபர் நிறுவனங்களில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை திருத்தியிருந்தால் உங்களுக்கும் மேற்கண்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.


அதாவது பயனர்களின் பாதுகாப்பு கருதி ஐபோன்களில் உள்ள TouchID எனும் எமது கைவிரல் அடையாளத்தை உள்ளிடும் பகுதியானது ஒவ்வொரு ஐபோனுக்கும் என தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு ஐபோனில் உள்ள TouchID வன்பொருள் பகுதியை இன்னுமொரு ஐபோனில் நிறுவி அதில் உள்ள தகவல்களை பெற முயற்சிப்பவர்களுக்கு அது ஏமாற்றமளிப்பதாகவே அமையும்.

எனவே நீங்கள் அப்பிள் நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்படாத மூன்றாம் நபர் நிறுவனங்களில் உங்கள் ஐபோன் சாதனத்தை கொடுத்து  திருத்தும் போது குறிப்பிட்ட பகுதியில் பாதிப்புகள் ஏற்படுமானால் உங்கள் ஐபோனின் கதியும் அதேகதிதான்.

இவ்வாறு TouchID திருத்தப்பட்ட ஐபோன்களில் உங்களுக்கு ஆரம்பத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை மாறாக உங்கள் ஸ்மார்ட் போனின் இயங்குதளத்தை நீங்கள் புதிய பதிப்புக்கு மேம்படுத்தும் போது உங்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படும்.

இதனை மீண்டும் திருத்திக்கொள்வதற்கு அப்பிள் நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட நிறுவனங்களிலேயே ஒப்படைக்க வேண்டும். இதற்கு வேறு மாற்று வழிகள் இல்லை என்பது சற்று வருந்தத்தக்க விடயமாகும். இது தொடர்பில் மேலும் உதவிகளை பெற ஆப்பிள் நிறுவனத்தின் பின்வரும் இணைய பக்கத்தை  அணுகலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top