தமது ஸ்மார்ட் போன் மூலமே தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்க்க யார் தான் விரும்பமாட்டார்கள்.உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்க்க முடியுமென்றால் நீங்கள் தொடர்ச்சியாக பார்த்துவரும் பயனுள்ள நிகழ்சிகளை கூட தவறாது பார்த்து விடலாம் அல்லவா?

அந்தவகையில் ஸ்மார்ட் போன் மூலம் தொலை காட்சி நிகழ்சிகளை பார்பதற்கான MDTV எனும் செயலியை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். ஆரம்பத்தில் இது சிறப்பாக இயங்கினாலும் காலப்போக்கில் அது கட்டணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு நிர்பந்தத்துக்கு அதன் பயனர்களை தள்ளியது.இருப்பினும் Sun TV, KTV, Sun Music, Raj TV, Jaya TV, Sirippoli போன்ற பிரபலமான தொலைக்காட்சி சேனல்கள் உட்பட இன்னும் ஏராளமான தமிழ் தொலைக்காட்சி சேனல்களை இலவசமாகவே பார்த்து மகிழ உதவுகிறது ஒளிதம் எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.

இதில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் மாத்திரம் அல்லாது ஹிந்தி, கன்னடம்,மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் அமைந்த தொலைகாட்ச்சி அலைவரிசைகளும் வெவ்வேறாக பட்டியல்படுத்தி தரப்பட்டுள்ளது.


இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் இலகு. எனினும் இதனை ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்க முடியாது மாறாக கீழே வழங்கப்பட்டுள்ள அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து குறிப்பிட்ட செயலியை தரவிறக்கி உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ள முடியும்.


நிறுவும் போது உங்கள் ஸ்மார்ட் போனின் Settings ===> Security பகுதியில் தரப்பட்டுள்ள Unknown Sources என்பதில் Tick செய்துகொள்க.
இதனை நிறுவிய பின் இந்த செயலியை திறந்து மொழியை தெரிவு செய்து உங்களுக்குத் தேவையான தொலைக்காட்சி அலைவரிசையை தெரிவு செய்வதன் மூலம் அதனை நேரடியாக கண்டுகளிக்க முடியும்.

மேலும் இதன் மூலம் தமிழ் மொழிமூல வானொலி அலைவரிசைகளையும் கேட்பதற்கான வசதி தரப்பட்டுள்ளது. இவைகள் தவிர மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ள இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.


குறிப்பு: தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்க இணைய இணைப்பு தொடர்புபடுத்தப் பட்டிருத்தல் அவசியம்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top