ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய  ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்கள் மூலம் "லைவ் போட்டோ" (Live Photo) எனும் வசதி ஆப்பிள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை ஒரு சில செக்கன்களுக்கு நகரும் விதத்தில் பிடிக்க முடியும்.
இது சாதாரண புகைப்படங்களை விட சற்று அதிகமாகவே எமது முன்னைய அனுபவங்களை மீட்டிப்பார்க்க தூண்டி விடக்கூடியதாகும்.

எனினும் இந்த வசதி இது வரை  ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் வழங்கப்படவில்லை. என்றாலும் CameraMX எனும் செயலி இந்த வசதியை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியத்தை நமக்கு உருவாக்கித் தருகிறது.


இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் இலகு. மேலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.

பின்னர் குறிப்பிட்ட செயலியை திறந்து வழமை போல் புகைப்படங்களை பிடிக்க வேண்டியது தான்.

இனி அவைகள் ஒரு சில செக்கன்களுக்கு நகரக்கூடிய புகைப்படங்களாக உங்கள் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படும்.
பின் அவற்றை பார்ப்பதற்கு குறிப்பிட்ட செயலியின் இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள நான்கு சிறிய கட்டங்களை கொண்ட குறியீட்டை சுட்டுக. இதன் போது திறக்கும் சாளரத்தில் நீங்கள் பிடித்த புகைப்படத்தை திறந்து அதனை தொடர்ச்சியாக ஒரு சில செக்கன்களுக்கு அலுத்துக பின்னர் குறிப்பிட்ட புகைப்படம் இயங்குவதை அவதானிக்கலாம். (Live Photo ஐ இலகுவாக  அடையாளம் காண அதில் சிறியதொரு அடையாளம் தரப்பட்டிருக்கும் மேலே படத்தில் உள்ளவாறு)

தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top