சிறந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றான ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட் போன்களை 15 நிமிடத்திற்குள் முழுமையாக மின்னேற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.பார்சிலோனா நகரில் இடம்பெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில் ஒப்போ நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.சோதனையின் போது 2500 mAh வலுவுடைய பேட்டரியை வெறும் 5 நிமிடத்தில்  45% வரை மின்னேற்ற முடிந்ததாக ஒப்போ நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Super VOOC என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பமானது தற்போது ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் போன்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் போன்களை இவ்வருட இறுதியில் வெளியிட இருப்பதாக ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒப்போ தொழில்நுட்பம்


பொதுவாக இன்று ஸ்மார்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்படும் Micro-USB மற்றும் USB Type-C ஆகிய இரு இணைப்பிகளுக்கும் (Port) இது ஆதரவளிக்கும் அதேநேரம் இதற்கென பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட மின்னேற்றிகள் மூலமே இது சாத்தியப்படும் என ஒப்போ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 5 நிமிடங்களில் 50 சதவீதம் வரை மின்னேற்றிக் கொள்வதற்கான தொழில்நுட்பத்தை Huawai நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வேகமாக இயங்கும் உலகில் இது போன்ற தொழில்நுட்பங்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

Love to hear what you think!

2 comments:

 
Top