நாம் அன்றாடம் எத்தனையோ உணவுப் பண்டங்களை உட்கொள்கிறோம், ஆனாலும் அவற்றின் சுவையறிந்து உட்கொள்கிறோமே தவிர அதில் உள்ள சத்துக்களை கருத்தில் கொண்டு உண்ணுபவர்கள் மிகவும் குறைவு (என்னை போன்று)


உணவில் உள்ள விட்டமின்


என்றாலும் சில சந்தர்பங்களில் எமது ஆரோக்கியத்திற்கு அதிக புரதச்சத்துள்ள அல்லது அதிக காபோவைதரேற்று கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறும் அல்லது அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை தவிர்க்குமாறும் வெவ்வேறு ஆலோசனைகள் வைத்தியர்களால் எமக்கு முன்வைக்கப்படுவதுண்டு.


இது போன்ற சந்தர்பங்களிலும் மேலும் பல்வேறு சந்தர்பங்களிலும் "குறிப்பிட்ட ஒரு உணவுப் பொருளில் எவ்வாறான உணவுக் கூறுகள் எந்த அளவு நிரம்பியிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது ஸ்பெல்ட் எனும் இணையதளம்.

மிகவும் எளிமையாகவும் தகவல்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை கணினிகள் மூலம் மாத்திரம் அல்லாது ஸ்மார்ட் போன்கள் மூலமும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


2 முட்டைகளில் உள்ள சத்துக்களை அறிய இந்த தளத்துக்குச் சென்று 2 Eggs என உள்ளிட்டால் அது 2 பெரிய முட்டைகளில் எந்த அளவு காபோவைதரேற்று உள்ளது எந்த அளவு புரதம் உள்ளது எந்த அளவு கொழுப்புச்சத்து உள்ளது என்பதை மிக தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் பட்டிய படுத்துகிறது.

மேலும் 2 முட்டைகளில் எத்தனை கிராம் புரதச்சத்து இருக்கும் என்பதையும் அந்த உணவுப்பொருளில் மொத்த கலோரிகள் எந்த அளவு உள்ளது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

இவைகள் தவிர ஒரு உணவுப்பண்டத்தில் மாத்திரம் அல்லது ஒரு உணவுக் கூடையில் உள்ள அனைத்து பொருள்ட்களையும் சேர்க்கும் போது அவைகள் அனைத்திலும் மொத்தம் எந்த அளவு கலோரிகள் உள்ளது என்பதையும் எந்த அளவு காபோவைதரேற்று, எந்த அளவு புரதம், எந்த கொழுப்புச்சத்து இருக்கின்றன என்பதை தனித்தனியாக அறிந்துகொள்ள முடிகின்றது.


மேலதிக உதவிக்குறிப்புகள்:
  • இந்த இணையதளத்தை பயன்படுத்தி நாம் ஒரு உணவுப்பண்டத்தில் உணவுக் கூறுகளை அறியும் போது தோன்றும் Create List என்பதை சுட்டுவதன் மூலம் ஒரு உணவுக் கூடையில் உள்ள அனைத்து உணவுப் பண்டங்களதும் மொத்த உணவுக் கூறுகள் தொடர்பான விபரங்களை பெற முடியும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட உணவுப்பண்டங்களின் உணவுக் கூறுகளை நீங்கள் அறியும் போது உங்களுக்கென தனிப்பட்ட ஒரு இணைய முகவரி உருவாக்கப்படும் அந்த இணைய முகவரியை நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் நீங்கள் உருவாக்கிய பட்டியலை அவர்களாலும் பார்க்க முடியும்.

உதாரணத்திற்கு நான் உருவாக்கியதை காண இங்கே சுட்டுக


  • இதற்கான ஐபோன் செயலியும் தரப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி பயன்படுத்தலாம்.

ஆசிரியர் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய இந்த இணையதளத்தை நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.
தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top