ஒரு சந்தர்பத்தில் பணக்காரகளின் பொருளாக இருந்த ஸ்மார்ட் போன்கள் இன்று பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி அனைவரது கைகளிலும் வலம்வரத் துவங்கியுள்ளது.

 ஸ்மார்ட் போன்


ஸ்மார்ட் போன்களின் முக்கியத்துவம் உணரப்பட்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மலிவு விலையில் ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்படுவதும் இதற்கான பிரதானமான காரணங்களாக குறிப்பிடலாம்.


அந்த வகையில் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தவுள்ளது ரிங்கிங் பெல் (Ringing Bells) எனும் இந்திய நிறுவனம்.


ப்ரீடம் 251 (Freedom 251) என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இது பிப்ரவரி 17 ஆம் திகதி அதாவது நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனைப் பற்றிய விவரக்குறிப்புகள் வெளியீட்டு நாள் அன்று (நாளை) தான் அறிவிக்கப்படும் என்று ரிங்கிங் பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top