இன்றைய ஸ்மார்ட் போன்கள் மூலம் நாம் நினைத்தும் பார்க்காத எத்தனையோ விடயங்களை செய்து கொள்ள முடிகிறது.

Smart measure Android


அந்த வகையில் உங்களுக்கு எதிரே இருக்கும் ஒரு பொருள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எத்தனை மீட்டர் தூரத்தில் இருக்கிறது என்பதையும் அதன் உயரம் எவ்வளவு என்பதையும் அறிந்துகொள்ள உதவுகிறது Smart Measure எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.

கீழே வழங்கியிருக்கும் இணைப்பு மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இதனை இலவசமாகவே உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.Smart Measure செயலியை பயன்படுத்துவது எப்படி?


பின்னர் Smart Measure செயலியை திறந்து அதன் வலது மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் H எனும் குறியீட்டை சுட்டுக. இனி திறக்கும் சாளரத்தில் Phone's Height என்பதில், "நில மட்டத்தில் இருந்து நீங்கள் எவ்வளவு உயரத்தில் உங்கள் ஸ்மார்ட் போனை நிலை நிறுத்துவீர்களோ அந்த உயரத்தை உள்ளிடல் வேண்டும்"சராசரி உயரமுள்ள ஒரு நபர் எனின் நில மட்டத்தில் இருந்து ஸ்மார்ட் போனை பிடிக்கும் உயரம் கிட்டத்தட்ட 1.5 மீட்டர்களாக (150 CM) அமையலாம்.


ஒரு பொருள் இருக்கும் தூரத்தை அறிதல்.


Smart Measure செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள "+" குறியீட்டை நீங்கள் உயரத்தை அறிய வேண்டிய பொருளின் கீழ் பகுதிக்கு (தரை மட்டம்) நகரத்துக. பின்னர் குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள Get distance எனும் பட்டனை அலுத்துக. இதன் போது குறிப்பிட்ட உங்களுக்கு எதிரே இருக்கும் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை அறியலாம். 

ஒரு பொருளின் உயரத்தை அறிதல்.மேற்குறிப்பிட்ட வகையில்  உங்களுக்கு எதிரே இருக்கும் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பெருக. அவ்வாறு பெற்ற பின்னர் Smart Measure செயலியின் வலது புறத்தில் அதன் உயரத்தை கணிப்பதற்கான "H" எனும் குறியீடு தோன்றும். இனி அதனை சுட்டுக. பின் குறிப்பிட்ட பொருளின் மேற்பகுதி வரை Smart Measure செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள "+" குறியீட்டை நகர்த்துவதன் மூலம் அதன் உயரத்தை கணித்துக் கொள்ளலாம்.இவ்வாறு உங்கள் நண்பரின் உயரம், உங்கள் கண் எதிரே இருக்கும் கட்டிடம், கம்பீரமாக காட்சி தரும் உயர்ந்ததொரு கோபுரம் என எந்த ஒன்றினதும் உயரத்தையும். அது இருக்கும் தூரத்தையும் மிக இலகுவாக கணித்துக் கொள்ளலாம்.

துல்லியமான முடிவுகளை பெற 

  • ஒரு பொருளின் தூரத்தை கணிக்கும் போதும், உயரத்தை கணிக்கும் போதும் நில மட்டத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும். இல்லையெனில் முடிவுகள் தவறானதாக அமையும்.


  • தூரம், உயரத்தை கணிக்க வேண்டிய பொருளை விட நீங்கள் இருக்கும் இடம் தரை மட்டத்தில் இருந்து உயர இருப்பின் Smart Measure செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் "H" எனும் குறியீட்டை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Building's Height என்பதில் நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு include the Building's height (H) என்பதில் Tick செய்ய வேண்டும்.


நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top