ஏதாவது ஒரு நிகழ்வை இரகசியமாக வீடியோ பதிவு  (Video Recording) செய்ய  வேண்டியுள்ளதா?

இரகசிய வீடியோ பதிவு செய்யும் செயலி


எமது அன்றாட வாழ்வில் இது போன்ற தேவைகள் பல்வேறு  சந்தர்பங்களில்  ஏற்படுவதுண்டு.

இவ்வாறான சந்தர்பங்களில் எமக்கு உதவுகிறது "சீக்ரெட் வீடியோ ரெகோடர்" (Secret Video Recorder) எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.

இந்த செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட் போனை கையில் வைத்திருப்பவரையும் கூட இரகசியமாக வீடியோ பதிவு செய்ய முடியும்.

இதனை கீழே வழங்கியுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.


எளிமையான இடைமுகத்தை  கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை எந்த ஒருவராலும்  மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த செயலியை நீங்கள் நிறுவிய பின் Secret Video Recorder மற்றும் Video Recorder ஆகிய இரு குறியீடுகளை உங்கள்  ஸ்மாட் போனில் காணலாம்.குறியீடு 1: சீக்ரெட் வீடியோ ரெகோடர் Secret Video Recorder

  • திட்டமிடப்பட்ட நேரத்தில் வீடியோ பதிவு செய்ய: (Schedule to record video)


இதில் Secret Video Recorder என்பதை சுட்டுவதன் மூலம் வீடியோ கோப்புக்கள் எந்த நேரத்தில் பிடிக்கப்பட வேண்டும், எவ்வளவு நேரம் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும், வீடியோ பதிவு செய்ய எந்த கேமரா (முன், பின்) பயன்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற தெரிவுகளை உங்கள் தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

  • வீடியோ ட்ரிம்மர் (Video Trimmer)மேலும் பிடிக்கப்பட்ட வீடியோ கோப்புக்களில் தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்வதற்கு வீடியோ ட்ரிம்மர் (Video Trimmer) எனும் வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலியின் செட்டிங்ஸ் (Settings) பகுதி மூலம் மேலும் பல மாற்றங்களையும் மேற்கொள்ள முடியும்.

  • மேலதிக வசதிகள்:
அதாவது இரகசிய வீடியோ பதிவு செய்யப்படும்போது ஃப்ளேஷ் லைட் இயக்கப்பட வேண்டுமா? வீடியோ பதிவு செய்யப்படும் போது அது திரையில் தோன்ற வேண்டுமா? வீடியோ  பதிவு செய்ய ஆரம்பிக்கப்படும்  போது சப்தம் (Shutter Sound) எழ வேண்டுமா? வீடியோ கோப்புடன் ஒலியும் பதிவு செய்யப்பட வேண்டுமா? என்பது போன்ற இன்னும் ஏராளமான மாற்றங்களை இதன் செட்டிங்ஸ் (Settings) பகுதி மூலம் மாற்றியமைக்க முடியும்.

  • கடவுச்சொல் வசதி:

இவைகள் தவிர இந்த செயலியை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு கடவுச்சொல் இடுவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


குறியீடு 2: வீடியோ ரெகோடர் Video Recorder

நீங்கள் ஏற்படுத்திய மேற்குறிப்பிட்ட மாற்றங்களுடன் உடனடியாக வீடியோ கோப்புக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனின் Video Recorder எனும் குறியீட்டை சுட்ட வேண்டும்.

இந்த செயலியை தரவிறக்க இங்கே சுட்டுக.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

2 comments:

  1. சகோ.. ஆண்ட்ராய்டு மொபைலில் screen ல் உள்ளதை அப்படியே வீடியோ வாக பதிவு செய்ய ஏதேனும் ஆப் இருக்கிறதா.. கூறவும்..

    பதிலளிநீக்கு

 
Top