அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Samsung Galaxy S7 Edge


சாம்சங் அறிமுகப்படுத்தும் சிறப்பு ஸ்மார்ட் போன்களான இவைகள் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனை ஒத்த தோற்றத்தை கொண்டுள்ளன.


சாம்சங் கேலக்ஸி எஸ் 6 ஸ்மார்ட் போனில் மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தும் வசதியும் நீர் மற்றும் தூசு உட்புகுதலை தடுப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் போன்ற ஸ்மார்ட் போன்களில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


உலோகத்திலான சுற்றுப்புறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விரு ஸ்மார்ட் போன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

தொடர்ச்சியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் திரை மூலம் நேரம் திகதி மற்றும் ஏனைய விபரங்களையும் எந்நேரத்திலும் கண்காணிக்கலாம்.

கேலக்ஸி எஸ் 7


சாம்சங் கேலக்ஸி எஸ் 7 ஸ்மார்ட் போன் 5.1 அங்குல  QHD AMOLED திரையை கொண்டுள்ள அதேவேளை சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஸ்மார்ட் போன் இருபக்கங்களிலும் சற்று வளைந்த 5.5 அங்குல  QHD AMOLED திரையை கொண்டுள்ளது.

இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 ப்ராசசரை கொண்டுள்ளதுடன் 4 ஜிபி RAM நினைவகத்தை கொண்டுள்ளன.

32 ஜிபி உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இவற்றின் நினைவகத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தி அதிகரித்துக் கொள்ளலாம்.

நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தும் வகையில் வலிமையான பேட்டரிகளை இவைகள் கொண்டுள்ளதுடன் கம்பியற்ற முறையில் மின்னேற்றிக் கொள்வதற்கான (Wireless Charging) வசதியும் இவற்றில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4K திறன் கொண்ட வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும். மேலும் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை பிடிப்பதற்கான DSLR தொழில்நுட்பம் இதில் தரப்பட்டுள்ளதுடன், குறைந்த வெளிச்சத்தில் ஐபோன் 6 ஸ்மார்ட் போன்களை விடவும் சிறந்த தெளிவுடைய புகைப்படங்களை புகைப்படங்களை இதன் மூலம் பிடிக்க முடியும் என சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது கருப்பு, வெள்ளை, வெள்ளி மற்றும் பொன் நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விற்பனை எதிர்வரும் மார்ச் 11 முதல் ஆரம்பமாகும்.

Love to hear what you think!

1 comments:

 
Top