ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 800 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் மெசேன்ஜர் பேஸ்புக் நண்பர்களுடன் எண்ணங்கள், கருத்துக்களை மட்டுமல்லாது புகைப்படங்கள், குரல்பதிவுகள், ஓட்டுக்கள் (Stickers) போன்றவற்றையும்  பகிர்ந்து மகிழ உதவுகிறது.
பேஸ்புக் மெசேன்ஜரில் சதுரங்கம் விளையாடலாம்

தற்பொழுது இதில் சதுரங்க (Chess) விளையாட்டை விளையாடுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.


ஆண்ட்ராய்டு, ஐபோன் மூலம் பேஸ்புக் மெசேன்ஜர் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரமல்லாது கணினி மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர்களுக்கும் இதனை நண்பர்களுடன் விளையாட முடியும்.
பேஸ்புக் மெசேன்ஜரில் @fbchess play என தட்டச்சு செய்வதன் மூலம் இந்த விளையாட்டை ஆரம்பிக்க முடியும். எனினும் தொடுவதன் (Touch) மூலம் அதிலுள்ள காய்களை நகர்த்த முடியாது. மாறாக அதற்கென தரப்படும் நிரல்களை கொண்டே அதிலுள்ள காய்களை நகர்த்த முடியும்.


இந்த விளையாட்டுக்கான இடைமுகத்தின் வலது இடது பக்கங்களில் 1 தொடக்கம் 8 வரையான எண்கள் தரப்பட்டுள்ளதுடன் அதன் மேலும் கீழும் A தொடக்கம் H வரையான ஆங்கில எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.

எனவே நீங்கள் காய்களை நகர்த்த வேண்டும் எனின் @fbchess என்பதுடன் நகர்த்தப்பட வேண்டிய கட்டத்துக்கு நேர இருக்கும் ஆங்கில எழுத்துடன் அதன் இலக்கத்தை தட்டச்சு செய்ய வேண்டும்.


தொடர்புடைய இடுகை:


உதாரணத்திற்கு அதன் முதல் வரிசையில் இருக்கும் Pawn என அழைக்கப்படும் காய்களில் ஒன்றை முன் வரிசையில் உள்ள கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் எனின் @fbchess d3 என தட்டச்சு செய்ய வேண்டும்.இந்த விளையாட்டின் போது வெவ்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்த வேண்டிய நிரல்கள் (Commands) தொடர்பில் அறிந்து கொள்ள பேஸ்புக் மெசேன்ஜரில் @fbchess help என தட்டச்சு செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த விளையாட்டில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் நண்பர்களுடன் விளையாடித்தான் பாருங்களேன்.

தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top