ஒவ்வொரு ஆண்டும் பார்சிலோனா நகரில் இடம்பெற்றுவரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

LG G5 smart phone


இதனடிப்படையில் இந்த வருடமும் பல புதிய தொழில்நுட்ப சாதனங்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்சி எஸ் 7 ஸ்மார்ட் போன் பற்றி நாம் எமது முன்னைய பதிவு மூலம் அறியத்தந்திருந்தோம் அதேபோல் இந்நிகழ்வில் எல்.ஜி நிறுவனமும் எல்.ஜி ஜி5 (LG G5) எனும் தனது சிறப்பு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்.ஜி ஜி5 மற்றும் நெக்சஸ்


இது கிட்டத்தட்ட கூகுள் அறிமுகப்படுத்தும் நெக்சஸ் ஸ்மார்ட் போன்களை ஒத்த தோற்றத்தை கொண்டிருந்தாலும் வேறுபட்ட சில சிறப்பம்சங்கள கொண்டுள்ளது.

எல்.ஜி ஜி5 ஸ்மார்ட் போன்


உலோகத்தினாலான சுற்றுப்புறத்தை கொண்டுள்ள இதன் கீழ் பகுதியை பேட்டரியுடன் முழுமையாக வேறுபடுத்த முடியும்.

இதனுடன் இணைத்து பயன்படுத்தும் வகையில் எல்.ஜி "ஃபிரண்ட்ஸ்" எனும் மேலும் பல தொழில்நுட்ப சாதனங்களையும் எல்.ஜி அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்.ஜி 360 கேம்


அதாவது 200 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை பிடிப்பதற்கான 13 மெகாபிக்சல் தெளிவுத்திரனுடைய 360 CAM எனும் கேமரா உபகரணம், மிக இலகுவாக புகைப்படங்களை பிடிப்பதற்கான 1200 mAh பேட்டரி வலுவுடன் கூடிய LG Cam Plus எனும் உபகரணம், சிறந்த ஒலியை வெளிப்படுத்துவதற்கான LG Hi-Fi Plus எனும் உபகரணம், LG VR 360 மற்றும் உலகின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் நீங்கள் விரும்பும் இடத்தை கண்காணிப்பதற்கான LG Rolling Bot உபகாரம், அத்துடன் LG Tone Platinum எனும் ஹேட்செட் உபகரணங்களே அவைகள் ஆகும்.

எல்.ஜி ஜி5 ஸ்மார்ட் போனின் பின்புறத்தின் மத்தியில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் தரப்பட்டுள்ளதுடன் டூயல் கேமரா வசதியும் தரப்பட்டுள்ளது.

LG G5


ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது  5.3 அங்குல குவாட் எச்.டி (QHD) திரையை கொண்டுள்ளது.

இதன் பின் புறத்தில் தரப்பட்டுள்ள இரண்டு கேமராவில் ஒன்று 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ள அதேவேளை மற்றையது 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ளது. மேலும் இதில் 8  மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய முன்பக்க கேமராவும் தரப்பட்டுள்ளது.

இது 4 ஜிபி RAM நினைவகத்தை கொண்டுள்ளதுடன் 32 ஜிபி உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டை பயன்படுத்தி இதன் நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

அத்துடன் இதில்  2800 mAh பேட்டரி தரப்பட்டுள்ளது. எனினும் எல்.ஜி ஜி4 மற்றும் ஜி3 போன்ற முன்னைய ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடுகையில் இதன் பேட்டரியின் வலு சற்று குறைவானது என்றே குறிப்பிட வேண்டும். 


இது 149.4 மில்லிமீட்டர் நீளம் 73.9 அகலம் 7.7 மில்லிமீட்டர் தடிப்பு போன்றவற்றை கொண்டுள்ள அதே நேரம் 159 கிராம் எடையை கொண்டுள்ளது.

இதன் விலை மற்றும் சந்தைபடுத்தல் திகதிகள் தொடர்பில் எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top