சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்கள் இணைய வெளியில் குவிந்து கிடக்கின்றன.

சிறுவர் பாடல்


சிறுவர்களின் அறிவு திறன், சிந்தனை போன்றவற்றின் விருத்திக்கு பெரிதும் உதவக்கூடிய இணையதளங்களும் இணையத்தில் உண்டு.


அதேநேரம் இதன் மறுபக்கம் பார்க்கையில் சிறுவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் விடயங்களும் இருக்கவே செய்கின்றன. இதற்காக சிறுவர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான சாதனங்களை பெற்றுக் கொடுக்காமல் இருப்பது அவ்வளவு பொறுத்தமான ஒன்றல்ல.


மாறாக அவர்கள் குறிப்பிட்ட சாதனங்களையும் வசதிகளையும் தேவையான, பயனுள்ள விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து வழங்க முயும்.

இதற்கென பல செயலிகளும் உண்டு. மேலும் அறிவுத் தேடலுக்கு பெரிதும் உதவக்கூடிய கூகுள் போன்ற தேடியந்திரங்களில் பாதுகாப்பாக தேடலை மேற்கொள்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் சிறுவர்களுக்கு என கிட்ல் (kiddle) எனும் புதியதொரு தேடியந்திரமும் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகளை இதன் மூலம் பெற முடிகிறது.

மேலும் தவறான, ஆபாசமான சொற்களை உள்ளிடும் போது அவைகள் தடை செய்யப்பட வார்த்தைகள் என தேடல் முடிவுகள் முடிவடைகிறது.

இது ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் தமிழ் மொழி மூல தேடல்களுக்கு பொருத்தமான தேடல் முடிவுகளை தரும் இணையதளங்கள் போதியளவு இல்லை. எனினும் எதிர்காலத்தில் இது கூகுள் தேடியந்திரத்தை போல் தமிழ் மொழி மூலமான தேடல்களுக்கும் சிறந்த முடிவுகளை பெற்றுத்தர இடமுண்டு.

Love to hear what you think!

1 comments:

 
Top