நீங்களும் ஐ.ஓ.எஸ் இயங்குதளம் நிறுவப்பட்ட ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்களை பயன்படுத்துபாவரா?

ஐபோன் குறைபாடு


அப்படியாயின் இந்த விடயத்தில் கொஞ்சம் அவதானமாக இருங்கள்.


அண்மையில் ஐபோன் சாதனங்களில் ஏற்படக்கூடிய Error-53 எனும் பிழைச்செய்தி பற்றி நாம் உங்களுக்கு கூறியிருந்தோம்.

அதேபோல் உங்கள் ஐ.ஓ.எஸ் சாதனங்களை செயலிழக்கச் செய்யும் மற்றுமொரு குறைபாடும் கண்டறியப்பட்டுள்ளது.

ஐபோனை செயலிழக்கச் செய்யும் திகதி. (1-1-1970)

நீங்கள் உங்களது ஐ.ஓ.எஸ் சாதனங்களில் திகதியை 1-1-1970 ஆக மாற்றினால் உங்கள் ஸ்மார்ட் போனை மீள துவக்க முடியாது போகும் ஒரு குறைபாடே இதுவாகும்.


பொதுவாக இந்த பிரச்சினை 64-பிட் பதிப்புக்களிலேயே ஏற்படுகின்றது. அதாவது ஐபோன் 5 எஸ் தொடக்கம் அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ஐ.ஓ.எஸ் சாதனங்களிலும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

அத்துடன் இதனை ஒரு சந்தர்பமாக பயன்படுத்தி சிலர்கள் ஏனையவர்களை ஏமாற்றமடையச் செய்யும் வகையில் சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதாவது உங்கள் ஐபோனின் திகதியை 1-1-1970 ஆக மாற்றிவிட்டால் அதன் லோகோவில் புதியதொரு தோற்றத்தை காணலாம் என்பது போன்ற பல தவறான செய்திகளையும் பரப்பி வருகின்றனர். 

பேஸ்புக் மற்றும் ரெட்டிட் தளங்களில் பகிரப்பட்ட ஒரு போலியான படத்தை கீழே காணலாம்.எனவே நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் இது போன்ற வலைகளில் சிக்கி விட வேண்டாம் மேலும் இதனை சோதித்துப் பார்ப்பதும் பொருத்தமானதல்ல.

இதன் வீடியோ இணைப்பை கீழே காணலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top