ஒரு சந்தர்பத்தில் எமது மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு இலக்கத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தால் மாத்திரமே அழைப்பவர் யார்? என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.ஆனாலும் இன்று அந்த வரையறையை தவிடு பொடியாக்கி உலகில் எந்த ஒரு மூலையில் இருந்தும் நமக்கு முன் பின் தெரியாதவர் கூட அழைப்பை ஏற்படுத்தினாலும் அவரது பெயரை அறிந்த கொள்ள வழிவகுத்துள்ளது இன்றைய பல சேவைகள்.

இவ்வாறு அழைப்பவரின் பெயரை அறிந்து கொள்வதற்காக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயலியை நாம் எமது முன்னைய பதிவு மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.


தொடர்புடைய இடுகை:ஆனால் எவ்வித செயலிகளின் துணையுமின்றி எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் "ட்ரூ காலர்" எனும் இணையதளத்திற்கு செல்வதன் மூலம் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் நபரின் பெயரை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

குறிப்பிட்ட தளத்திற்கு அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் பெயரை அறிய வேண்டிய தொலைபேசி இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் அந்த இலக்கத்தை பயன்படுத்தும் நபரின் பெயரை உடனடியாகவே அறிந்துகொள்ள முடியும்.நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் இந்த தளத்திற்கு விஜயம் செய்பவர் எனின் குறிப்பிட்ட தளத்தின் முகப்புப் பக்கத்தில் தோன்றும் Continue to website என்பதை சுட்டுக. (மேலே படத்தில் உள்ளவாறு)பின் இந்த தளத்தை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்களது கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் அல்லது யாஹூ போன்ற ஏதாவது ஒரு கணக்கை பயன்படுத்தி குறிப்பிட்ட தளத்திற்கு உள்நுழைய வேண்டும்.பின் நீங்கள் விரும்பும் எத்தனை தொலைபேசி இலக்கங்களையும் அதில் உள்ளிட்டு குறிப்பிட்ட இலக்கத்தை பயன்படுத்தும் நபருடைய பெயரை அறியலாம்.

மேலும் உங்கள் பிரதேசத்தில் எரிதமாக (Spam) இனங்காணப்பட்டுள்ள இலக்கங்களையும் இந்த தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது..


இதற்கு http://www.truecaller.com/spam-numbers எனும் பக்கத்திற்கு சென்று உங்கள் நாட்டை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் நாட்டில் தொல்லை தரக்கூடிய இலக்கங்களாக இனங்காணப்பட்டுள்ள அத்தனை தொலைபேசி இலக்கங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top