விக்கிபீடியா தளத்தில் இல்லாத ஒரு தகவலே இல்லை எனும் அளவுக்கு ஏராளமான தகவல்கள் குவிந்து கிடைக்கின்றன.

விக்கிபீடியா இலகு ஆங்கிலம்


குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக நாம் கூகுள், பிங் (Bing), போன்ற தேடியந்திரங்கள் மூலம் தேடினாலும் கூட எமக்கு பெரும்பாலான முடிவுகள் விக்கிபீடியா தளத்தில் இருந்தே கிடைக்கின்றது.

2015 ஆம் ஆண்டின் தகவலின் படி விக்கிபீடியா 

  • விக்கிபீடியா தளத்திற்கு மாதாந்தம் 374 மில்லியன் பயனர்கள் விஜயம் செய்கின்றனர். 

  • கிட்டத்தட்ட 70,000 மக்களால் இது நிர்வகிக்கப்படுகிறது.  

  • 290 மொழிகளில் 3 கோடியே 80 இலட்சம் ஆக்கங்கள் இதில் உள்ளன. இவற்றுள் 5 கோடிக்கும் மேற்பட்ட ஆங்கில மொழியில் அமைந்த ஆக்கங்கள் இருக்கின்றன.


எனவே உலகின் மிகப்பெரிய ஒரு தகவல் களஞ்சியமான திகழும் இந்த இணைய தளத்தில் தமிழ் மொழியிலும் ஏராளமான ஆக்கங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

என்றாலும் எமக்குத் தேவையான ஒரு தகவல் இதில் ஆங்கில மொழியில் இருக்கும் அதேநேரம் அது தமிழ் மொழியில் இல்லாமல் இருக்கலாம். இது போன்ற சந்தர்பங்களில் எமக்கு ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லையெனின் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பூரண அறிவை பெற தவறிவிடுவோம். அல்லது குறிப்பிட்ட விடயத்தை தவறாக புரிந்துகொள்ளும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.

ஆகவே ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லாதவர்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும் படியான இலகு ஆங்கிலத்தில் விக்கிபீடியா தளத்தை பார்ப்பாதர்கான வசதியும் தரப்பட்டுள்ளது. என்றாலும்  இதனை அதிகமானவர்கள் அறிந்ததில்லை.

நீங்கள் ஆங்கில மொழியில் பெற்ற ஒரு விக்கிபீடியா இணையப் பக்கத்தை இலகுவான உரை நடையில் அமைந்த ஆங்கில மொழிக்கு மாற்றிக்கொள்வது மிகவும் இலகு.




அதாவது குறிப்பிட்ட இணைய முகவரியில் (https://en.wikipedia.org/wiki/xxxx) en என்பதற்கு பதிலாக simple என்பதை சேர்த்துவிட வேண்டும். அவ்வளவுதான்.



இனி குறிப்பிட்ட தகவல் இலகுவான ஆங்கில மொழியில் எமக்கு கிடைக்கும்.

இதன் போது இலகுவான உரைநடையில் மாத்திரம் அல்லாது தேவையற்ற விடயங்கள் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட விடயம் தொடர்பான முக்கிய அம்சங்கள் மாத்திராம் காட்டப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு: நாம் Tamil language என்பதை விக்கிபீடியா தளத்தில் தேடினால் எமக்கு https://en.wikipedia.org/wiki/Tamil_language என்ற பக்கம் கிடைக்கும். இதனை இலகுவான ஆங்கிலத்தில் அறிய வேண்டும் எனின் https://simple.wikipedia.org/wiki/Tamil_language என மாற்றிவிட வேண்டும்.

அவ்வளவு தான்.

நீங்கள் விக்கிபீடியா தளத்தை மொபைல் சாதனங்கள் மூலம் பயன்படுத்தும் போது https://en.m.wikipedia.org/wiki/xxxx என இணைய முகவரி தோன்றும் இதில் புதியாக தோன்றும் "m" பற்றி யோசிக்க வேண்டியதில்லை. மேற்குறிப்பிட்ட வகையில் en என்பதை மாத்திரம் மாற்றி விட்டால் போதுமானது. (https://simple.m.wikipedia.org/wiki/xxxx)



தமிழ்இன்போடெக் தளத்தில் நீங்கள் அறிந்த தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்வதன் மூலம் எமது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவுங்கள்.



தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top