மாதாந்தம் 1 பில்லியன் பயனர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு மெசேஜிங் சேவையே வாட்ஸ்அப் சேவையாகும்.

வாட்ஸ்அப் உதவிகள்


இதனை எமது தேவைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.
என்றாலும் நாம் அனைவரும் அனைத்து வசதிகளையும் அறிந்து வைத்துள்ளோம் என உறுதியாக கூறிவிட முடியாது.எமது முன்னைய பதிவின் மூலம் "வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியவர் அறிந்து கொள்ளாத வகையில் படிப்பது எப்படி?" என்பதை விளக்கியிருந்தோம்.

அதேபோல் அதிகமானவர்களால் அறியப்படாத வசதியே வாட்ஸ்அப் செயலியில் தரப்பட்டுள்ள Broadcast எனும் வசதியும் ஆகும்.

இந்த வசதி மூலம் ...

ஒரே நேரத்தில் 256 வரையான நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்ப முடியும்.


பண்டிகை தினத்தின் போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கு, நண்பர்கள் தினத்தின் போது நண்பர்களை பாராட்டுவதற்கு, ஒரு எச்சரிக்கை செய்தியை பலருக்கு தெரிவிக்க வேண்டிய தேவைகள் உள்ள போது என பல்வேறு சந்தர்பங்களில் இந்த வசதி எமக்கு பயனளிக்கும்.

இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி?1. இந்த வசதியை பயன்படுத்துவதற்கு வாட்ஸ்அப் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கொண்ட மெனு பட்டனை சுட்ட வேண்டும்.

2. பின்னர் தோன்றும் சாளரத்தில் New Broadcast என்பதை சுட்ட வேண்டும்.3. இனி தோன்றும் இடைமுகத்தின் மூலம் நீங்கள் செய்தியை அனுப்ப வேண்டிய நபர்களை தெரிவு செய்த பின் குறிப்பிட்ட சாளரத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Create என்பதை அழுத்த வேண்டும்.4. இனி நீங்கள் தெரிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் ஒரே நேரத்தில் புகைப்படம், வீடியோ கோப்புக்கள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.

அவ்வளவுதான்.

Love to hear what you think!

1 comments:

 
Top