இன்று "பாதுகாப்பான இணைய நாள்" (Safer Internet Day) ஆகும். (2016 பிப்ரவரி 9)

கூகுள் டிரைவ் என்றால் என்ன?


இணையம் மூலம் ஏராளமான பயன்களை பெற முடிந்தாலும் அதன் மறுபக்கம் பார்க்கையில் தனிமனித சுதந்திரத்துக்கு ஊறு விளைவிக்கும் பல இணைய வழி தாக்குதல்களும் இடம் பெறவே செய்கின்றன.

இன்று சர்வ சாதாரணமாக இணையத்தை பயன்படுத்திவரும் அனைவருக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 9 ஆம் திகதி "பாதுகாப்பான இணைய தினம்" என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இன்றைய தினம் நீங்களும் உங்கள் கூகுள் கணக்கை மறு பரிசீலனை செய்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் கூகுள் வழங்கும் மேலதிக இலவச 2ஜிபி இணைய சேமிப்பகத்தை உங்களாலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கூகுளின் இணைய சேமிப்பகம் என்றால் என்ன?


இணையத்தை பயன்படுத்தும் ஆரம்பநிலை பயனர்களுக்கு இவ்வாறான கேள்விகள் எழலாம். கூகுளின் இணைய சேமிப்பகம் "கூகுள் டிரைவ்" என அழைக்கப்படுகிறது. புகைப்படங்கள், ஆவணங்கள் வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றையும் இதில் சேமித்து வைக்க முடியும். இதற்கென 15 ஜிபி இலவச இடத்தை கூகுள் தருகிறது. கூகுள் கணக்கை வைத்திருப்பவர்கள் அனைவராலும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

15 ஜிபி எனும் இட அளவை அதிகரிக்க முடியுமா?


கூகுள் தரும் 15 ஜிபி இலவச இட வசதியை மேலும் அதிகரிக்க விரும்பினால் மாதாந்தம் 1.99 அமெரிக்க டொலர்கள் செலுத்துவதன் மூலம் 100 ஜிபி இடத்தையும், மாதாந்தம் 9.9 ஜிபி அமெரிக்க டொலர்கள் செலுத்துவதன் மூலம் 1 டெரா பைட் இடத்தையும் பெற முடியும்.

எனினும் உங்கள் கூகுள் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதன் மூலம் கட்டணங்கள் எதுவும் இன்றி மேலும் 2 ஜிபி இலவச இணைய சேமிப்பாக வசதியை கூகுளிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.


இதனை மேற்கொள்வது எப்படி?

இது மிகவும் இலகு...1. முதலில் நீங்கள் Security Checkup எனும் இந்த இணைப்பை சுட்டுவதன் மூலம் உங்கள் கூகுள் கணக்கின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட்டு கூகுள் கணக்கினுள் நுழைந்துகொள்க.
2. பின்னர், உங்கள் கூகுள் கணக்கின் கடவுச்சொல் மறந்துபோகும் சந்தர்பத்தில் அதனை மீட்டுக் கொள்வதற்கான Check your recovery information எனும் பகுதியில் நீங்கள் வழங்கியிருக்கும் தொலைபேசி என் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியானாதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.

அவ்வாறு வழங்கப்பட்டு இல்லையெனின் புதியதொரு தொலைபேசி இலக்கத்தை வழங்கி அதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
3. இனி Done எனும் பட்டனை சுட்டும் போது Check your connected devices எனும் பகுதி உங்களுக்கு தோன்றும். அதில் நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் பட்டியல் படுத்தப்படும். அவைகள் அனைத்தும் சரியானது எனின் Looks Good எனும் பட்டனை சுட்டுக.
4. பின்னர் உங்களுக்கு Check your account permissions எனும் பகுதி தோன்றும். இதில் உங்கள் கூகுள் கணக்குடன் தொடர்புபடுத்தி பயன்டுத்திய மூன்றாம் நபர் சேவைகள் பட்டியல் படுத்தப்படும். அவற்றுள் பயன்படுத்தாதவைகள் இருப்பின் நீக்கிக் கொள்ள முடியும்.5. இறுதியாக Done என்பதை சுட்டும்போது உங்களுக்கான இலவச 2 ஜிபி இணைய சேமிப்பகம் வழங்கப்படும்.எனவே உங்கள் 15 ஜிபி இலவச சேமிப்பகத்துடன் இந்த 2 ஜிபி இட வசதியும் சேர்ந்து உங்களுக்கு 17 ஜிபி இலவச இட வசதி கிடைக்கும். நீங்கள் சென்ற வருடமும் மேலே குறிப்பிட்ட செயற்பாட்டை செய்திருந்தால் தற்பொழுது உங்களின் மொத்த இணைய சேமிப்பகம் 19 ஜிபி  வரை அதிகரித்திருக்கும்.

எது எப்படியோ சவால்கள் நிறைந்த இன்றைய உலகை வெற்றி கொள்ள "தங்குதடையற்ற பாதுகாப்பான இணைய பயணத்துக்கு" நாம் உங்களை வாழ்த்துகிறோம்.

தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

  1. சூப்பர் நல்ல பதிவு எனக்கும் 2ஜிபி இடம் அதிகமாக கிடைத்தது மகிழ்ச்சி நன்றி...!!!

    பதிலளிநீக்கு

 
Top