ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வருகையின் பின் சாம்சங் ஸ்மார்ட் போன்களும் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்துக்கு வந்துள்ளது.அந்தவகையில் நீங்களும் சாம்சங் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா?

அப்படியாயின் அதில் நாம் வழமையாக பார்க்கக்கூடிய எழுத்துருவை மாற்றி புதிய எழுத்துருக்களை நிறுவி பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

சாம்சங் ஸ்மார்ட் போன்களில் அழகிய எழுத்துருக்களை நிறுவிக் கொள்ள உதவுகிறது HiFont எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி 

நாம் கீழே வழங்கியிருக்கும் இணைப்பின் மூலம் இதனை இலவசமாகவே உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் நிறுவிக் கொள்ள முடியும்.


பின்னர் இந்த செயலியை திறந்தால் பல அழகிய எழுத்துருக்கள் இதில் பட்டியல்படுத்தப்படும். அவைகள் Fashion, Handwriting, All Caps, Typewriter என ஏராளமான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் பல வர்ண எழுத்துருக்களும் இதில் தரப்பட்டுள்ளன.அவற்றுள் உங்களுக்கு பிடித்த எழுத்துருவை தெரிவு செய்து Download என்பதை அழுத்த வேண்டும்.குறிப்பிட்ட எழுத்து தரவிறக்கப்பட்டதன் பின்னர் தோன்றும் USE என்பதை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட எழுத்துருவை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ள முடியும்.குறிப்பு: நிறுவும் போது Install Blocked எனும் பிழைச்செய்தி தோன்றினால் Setting > Security எனும் பகுதியில் தரப்பட்டிருக்கும் Unknown Sources என்பதில் Tick செய்து கொள்க.இறுதியாக Settings > Device > Font எனும் பகுதியின் ஊடாக நீங்கள் நிறுவிய எழுத்துருவை தெரிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Download Hi Fonn From PlayStore

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top