இன்று ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் பயன்பாட்டில் இருந்தாலும் கூட ஸ்மார்ட் போன் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு லாலிபாப்  வசதிகள்


அத்துடன் கிட்கேட், ஜெல்லிபீன் போன்ற பதிப்புக்களை பயன்படுத்தியவர்கள் ஆண்ட்ராய்டு லாலிபாப் பதிப்புக்கு தமது பதிப்புகளை மேம்படுத்துவதால் இன்று லாலிபாப் பதிப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.


ஆண்ட்ராய்டு லாலிபாப் மறைந்திருக்கும் வசதிகள் 

எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் வசதிகள் மற்றும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம்.


1. நோடிபிகேஷன்களை மட்டுப்படுத்துதல் 

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு செயலி மூலமோ அல்லது பல செயலிகள் மூலமோ நோடிபிகேஷன் ஏற்படுத்தப்படுத்தப்படுவது உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?

அப்படியாயின் அவ்வாறு அடிக்கடி நோடிபிகேஷன்களை ஏற்படுத்தும் செயலிகளில் இருந்து நோடிபிகேஷன்கள் தோன்ற செய்யாமல் இருக்க ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் வசதி  தரப்பட்டுள்ளது.இதனை மேற்கொள்ள

Settings > Sound and notification > Application notification எனும் பகுதி ஊடாக குறிப்பிட்ட செயலிகளில் இருந்து தோன்றும் நோடிபிகேஷன்களை மிக இலகுவாக தடை செய்ய முடியும்.ஆண்ட்ராய்டு லாலிபாப் தவிர்ந்த ஏனைய பதிப்புக்களில் மேற்குறிப்பிட்ட வசதியை பெற கீழுள்ள இணைப்பில் வழங்கப்பட்டிருக்கும் எமது முன்னைய பதிவை பார்க்க:2. ஃப்ளாஷ் லைட் வசதி

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்புக்களில்  ஃப்ளாஷ் லைட்  பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படவில்லை.

எனவே பெரும்பாலானவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் இதற்கான செயலியை தரவிறக்கி பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் ஃப்ளாஷ் லைட் வசதியை பயன்படுத்த வேண்டும் எனின் மூன்றாம் நபர் செயலிகளை பயன்படுத்த வேண்டியதில்லை. இதற்கான வசதி ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்திலேயே தரப்பட்டுள்ளது.


இந்த வசதியை பெற

இதனை Notification பகுதியில் தரப்பட்டுள்ள Quick Settings எனும் பகுதியின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். எனினும் சாம்சங் போன்ற இன்னும் பல நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான வசதி தரப்படாமல் இருக்கலாம்.இவ்வாறான சந்தர்பங்களில் விட்ஜெட் பகுதியின் ஊடாக ஃப்ளாஷ் லைட்டை நிர்வகிப்பதற்கான வசதியை ஹோம் ஸ்க்ரீனுக்கு (Home Screen) இணைத்துக் கொள்ளலாம்.

3. லாக் ஸ்க்ரீன் மூலம்  நோடிபிகேஷன்களை கண்காணிக்கலாம் 


உங்கள் ஸ்மார்ட் போனுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து  நோடிபிகேஷன்களையும் லாக் ஸ்க்ரீன் மூலமே பார்த்துக் கொள்வதற்கான வசதி ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் தரப்பட்டுள்ளது.


இதனை செயற்டுத்திக் கொள்ள

Settings > Sound and notification எனும் பகுதியில் தரப்பட்டுள்ள While locked என்பதை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Show all content அல்லது Hide Sensitive content என்பதை சுட்டுக.இனி அனைத்து நோடிபிகேஷன்களையும் லாக் ஸ்க்ரீன் மூலமே கண்காணிக்கலாம்.

லாலிபாப் இயங்குதளத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பதிப்புக்களில் இந்த வசதியை பெற கீழுள்ள பதிவை பார்க்க:
4. கண்களுக்கு பொருத்தமான வர்ணங்களில் ஸ்மார்ட் போனின் திரையை அமைத்துக் கொள்ளல் 

சிலர்களுக்கு நிறங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிய முடியாத குறைபாடுகள் உண்டு. இவ்வாறான குறைபாடு உடையவர்கள் தங்கு தடையின்றி ஸ்மார்ட் போன்களில் தோன்றும் எழுத்துக்களை வாசிப்பதற்கும் அதனை இலகுவாக பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் அதன் வர்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.


இதனை மேற்கொள்ள

Settings > Accessibility > Display > Color correction

வேறு சில ஸ்மார்ட் போன்களில்Settings > Accessibility > Vision > Color adjustment எனும் பகுதி ஊடாக உங்களுக்கு பொருத்தமான விதத்தில் அமைத்துக் கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை:5. மறைந்திருக்கும் விளையாட்டு 

நீங்கள் Flappy Bird விளையாடியதுண்டா? பொழுது போக்கிற்காக ஏராளமானவர்களால் விரும்பி விளையாடப்பட்ட இது துரதிஷ்டவசமாக அதனை உருவாக்கியவரால் கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்டது.

எனினும் இது போன்றதொரு விளையாட்டு ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இதனை பெற்றுக்கொள்ள.

Settings > General > About device என்பதை சுட்டும்போது பெறப்படும் பகுதியில் Android version என்பதை வேகமாக பலமுறை சுட்டுக இதன் போது லாலிபாப் அடையாளம் தோன்றும் பின்னர் அதை தொடர்ச்சியாக சிறிது நேரம் அலுத்துக. இனி குறிப்பிட்ட விளையாட்டை உங்களாலும் விளையாடலாம்.


 6. ஃப்ளாஷ் நோடிபிகேஷன் வசதி 

உங்கள் ஸ்மார்ட் போனுக்கு குறுஞ்செய்திகள் வரும் போதோ அல்லது அழைப்புக்கள் ஏற்படுத்தப்படும் போதோ அல்லது நோடிபிகேஷன்கள் ஏற்படுத்தப்படும் போதோ உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஃப்ளாஷ் லைட்டை ஒளிரச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா?

அப்படியாயின் இதற்கான வசதியும் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் தரப்பட்டுள்ளது.
இந்த வசதியை பெற 

Settings > My Device > Accessibility > Flash Notification அல்லது Settings > Accessibility > Hearing > Flash Alerts எனும் பகுதியின் ஊடாக இந்த வசதியை பெறலாம்.


தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

2 comments:

 
Top