ஒரு சில நாட்களுக்கு முன் ரூபா 500 க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

ரூபா 251 மொபைல்


அந்தவகையில் இன்று (17-2-2016) ரிங்கிங் பெல் (Ringing Bells) எனும் இந்திய நிறுவனம் வெறும் 251 ரூபாய்களுக்கு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.


ப்ரீடம் 251 (Freedom 251) என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இது குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிறந்த வசதிகளையும் கொண்டுள்ளமை குறிபிடத்தக்கது.

4 அங்குல திரையை கொண்டுள்ள இது 1.3 Ghz வேகத்தில் இயங்கக்கூடிய குவாட் கோர் ப்ரோசசரை தன்னகமாக கொண்டுள்ளது.


அத்துடன் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது 1 ஜிபி RAM ஐயும் தன்னகமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 3ஜி வலையமைப்புக்கும் ஆதரவளிக்கக்கூடிய இது 3.2 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமராவையும் செல்பி புகைப்படங்களை பிடிப்பதற்கு ஏற்றவாறான கேமராவையும் தன்னகமாக கொண்டுள்ளது.

இதில் 8 ஜிபி உள்ளக நினைவகம் தரப்பட்டுள்ளதுடன் நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு 32 ஜிபி வரையான மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்துவதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இதன் முன்பதிவுகள் நாளை (18-2-2016) காலை 6 மணி முதல் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும். அதாவது பிப்ரவரி 21, 2016 மாலை  8.00 வரை. மேலும் இதற்கான ஒரு வருட உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

Freedom251 எனும் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தின் மூலம் இந்த ஸ்மார்ட் போன் தொடர்பான மேலும் விபரங்களை அறியலாம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top