எமது உறவினர்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மெசேன்ஜர் மூலமாக மிக இலகுவாக எமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது.


பேஸ்புக் மெசேஞ்சர்

அந்தவகையில் உலகளாவிய ரீதியில் பேஸ்புக் மெசேன்ஜர் சேவையை மாதாந்தம் 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


கடந்த வருடம் பேஸ்புக் கணக்கு இன்றியே பேஸ்புக் மெசேன்ஜர் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.


தற்போது பேஸ்புக் மெசேன்ஜரில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்துவதற்கான வசதியையும் பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.


அதாவது பேஸ்புக் மெசேன்ஜர் செயலியில் புதியதொரு கணக்கை  பயன்படுத்த வேண்டும் எனின் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் கணக்கில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.இதன் மூலம் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் போன்ற அனைவருக்கும் ஒரே ஸ்மார்ட் போனை பயன்படுத்தி மெசேன்ஜர் செயலியை பயன்படுத்தவும் முடியும்.

இந்த வசதியை பெற நீங்கள் செய்ய வேண்டியது இதன் புதிய பதிப்பை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக்கொள்ள வேண்டியது மாத்திரமே ஆகும். 

நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் ஆப் ஸ்டோர் மூலமும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் ப்ளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கிக் கொள்ளலாம்.பின்னர் மெசேன்ஜர் செயலியின் செட்டிங்க்ஸ் பகுதியில் தரப்பட்டுள்ள Accounts என்பதை சுட்டுவதன் மூலம் புதிய கணக்குகளை இணைத்துக் கொள்ள முடியும்.

அவ்வளவுதான்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top